அது வேறு யாரும் இல்லை நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான். "காஸ்மோரா ” இயக்குனர் கோகுல் தான் இயக்கியிருந்தார். இவர் விஜய் சேதுபதி நடித்த "இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா, ஜூங்கா " போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குனர் கோகுலும் ,நடிகர் விஜய் சேதுபதியும் துறை ரீதியான நண்பர்கள்.ஒரு முறை இயக்குனர் கோகுல் இயக்கிய "காஸ்மோரா" படத்தின் ஒன் லைன் கதையை மட்டும் நடிகர் விஜய் சேதுபதியிடம் கூறியுள்ளார். அந்த கதை விஜய் சேதுபதிக்கு மிகவும் பிடித்து போக அந்த படத்தில் நடிக்க அவர் மிகவும் ஆசைப்பட்டுள்ளார்.
ஆனால், இயக்குனர் கோகுலோ இந்த படம் வேண்டாம், நாம் வேறு படம் பண்ணுவோம் என்று நடிகர் விஜய் சேதுபதியிடம் கூறியுள்ளார். பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் இவர்கள் கூட்டணியில் உருவான படம் தான் "ஜூங்கா".




