விஜி சந்திரசேகரின் மகளுக்கு நடந்து முடிந்த திருமணம் – நேரில் வந்து வாழ்த்திய சூர்யா,மைக் மோகன்,ராதிகா

0
594
- Advertisement -

பிரபல நடிகை விஜி சந்திரசேகரின் மகளுக்கு திருமணம் நடைபெற்று இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் விஜி சந்திரசேகர். இவர் வேற யாரும் இல்லை நடிகை சரிதாவின் தங்கை தான். இவர் 1981 ஆம் ஆண்டு இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியிருந்த தில்லு முல்லு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தில் இவர் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இதனால் விஜிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தது. ஆனால், இவர் படிப்பில் கவனம் செலுத்தி வந்ததால் தன்னை தேடி வந்த வாய்ப்புகளை எல்லாம் மறுத்துவிட்டார். பின் தன்னுடைய படிப்பை முடித்த பிறகு விஜி சந்திரசேகர் அவர்கள் தெலுங்கில் கலியுகம் என்ற படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு கன்னடம், மலையாளம் போன்ற படங்களில் தான் விஜி நடித்துக் கொண்டு வந்தார். மீண்டும் இவர் தமிழில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த கிழக்கு சீமையிலே என்ற படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்திருந்தார். அதற்குப் பிறகு இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் தான் நடித்திருக்கிறார்.

- Advertisement -

விஜி சந்திரசேகர் திரைப்பயணம்:

அதிலும் இவர் தமிழில் நடித்த பிரியங்கா, தேவி ஐஏஎஸ், பார்த்தாலே பரவசம், சமஸ்தானம், ஆயுத எழுத்து, ஜோர், அரக்கோணம் போன்ற படங்களில் எல்லாம் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருந்தது. தற்போது இருக்கும் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் கேப்டன் மில்லர் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜி நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

விஜி சந்திரசேகர் நடிக்கும் படங்கள்:

இந்த படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரர் இயக்கி இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து விஜி சந்திரசேகர் அவர்கள் டி என் ஏ, இயக்குனர் கோபி நயினார் இயக்கி வரும் திரைப்படம் என பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். மேலும், இவர் படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் சீரியலிலும் நடித்து இருக்கிறார். அந்த வகையில் இவர் நடித்த அழகி சீரியல் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றது.

விஜி சந்திரசேகர் குடும்பம்:

தற்போது இந்த சீரியலை மீண்டும் ஒளிபரப்பி வருகிறார்கள் . இதனிடையே நடிகை விஜி அவர்கள் 1995 ஆம் ஆண்டு சந்திரசேகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லவ்லின், சுரக்ஷா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் விஜியின் இரண்டாவது மகள் லவ்லின் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியாகியிருந்த அயலி என்ற வெப் சீரஸில் இவர் மிரட்டி இருந்தார் என்று சொல்லலாம்.

விஜி சந்திரசேகர் மகளின் திருமணம்:

இந்த நிலையில் விஜி சந்திரசேகரின் மூத்த மகளான சுரக்ஷாவிற்கு தான் தற்போது திருமணம் நடந்திருக்கிறது. இவர் தொழில் அதிபரை திருமணம் செய்து இருக்கிறார். இந்த திருமணத்திற்கு ராதிகா, ஜெயஸ்ரீ, சூர்யா, அருண் விஜய், சமுத்திரகனி, மோகன் உள்பட பலர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். தற்போது சுரக்ஷா திருமண புகைப்படங்கள் தான் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement