மறைந்த நடிகர் புனித் கதையில் விக்ரமா ? விக்ரம் 62 படத்தின் இயக்குனர் இவர் தானா ?

0
319
vikram
- Advertisement -

விக்ரமின் 62 வது படத்தை இயக்க இருக்கும் இயக்குனர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். இவர் சினிமாவில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் திரை உலகில் நுழைந்து தன்னுடைய கடும் உழைப்பினால் தனெக்கென ஒரு முத்திரையை பதித்து இருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து இருக்கிறார். இவருடைய நடிப்பிற்கு தேசிய விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, பிலிம்பேர் விருது எனப் பல்வேறு விருதுகளை வாங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-
cobra

அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் சிவாஜி, கமலுக்கு பின்னர் நடிப்பிற்கு ஒரு உதாரணமாக இருப்பவர் என்றால் அது விக்ரம் என்றே சொல்லலாம். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த மகான் என்ற படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து இருக்கும் படம் “கோப்ரா”. இந்த கோப்ரா படத்தில் வித விதமான கெட்டப்புகளில் விக்ரம் வருகிறார் என்ற தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

- Advertisement -

கோப்ரா படம்:

அதாவது, நடிகர் விக்ரம் அவர்கள் கோப்ரா படத்தில் 20 விதமான கெட்டப்புகளில் நடித்து இருக்கிறார் என்று கூறபடுகிறது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி நடித்து இருக்கிறார். இவர்களுடன் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். மேலும், ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். மிகுந்த பொருட்செலவில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படம்ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் விக்ரம் அவர்கள் பிஸியாக இருக்கிறார்.

பொன்னியின் செல்வன்:

இதனை அடுத்து விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பொன்னியின் செல்வன். இந்த படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அடுத்து செப்டம்பர் மாதத்தில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார். இந்த படம் கோலார் தங்க சுரங்கத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் கதை என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

விக்ரம் 61 படம்:

இந்த படத்தை ஸ்டுடியோ ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இது விக்ரமின் 61 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விக்ரமின் 62 ஆவது படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. கோப்ரா படத்தை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து தான் விக்ரம் 62 படத்தை இயக்குகிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. இந்த படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விக்ரம் 62 படத்தை கன்னட இயக்குனர் பவன் குமார் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

விக்ரம் 62 படம்:

இந்த படம் தமிழ்- கன்னடம் மொழியில் உருவாக இருக்கிறது. பவன் ஏற்கனவே புனித் ராஜ்குமார், திரிஷாவை வைத்து ‘த்வித்வா’ என்ற படத்தை இயக்க இருந்தார். அதற்கான பணிகளும் நடந்து கொண்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் அந்த படத்தில் பகல் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே புனித் ராஜ்குமார் இறந்துவிட்டார். இதனால் இந்த படம் அப்படியே நின்று விட்டது. மேலும், விக்ரமின் 62 வது படத்தை பவன் இயக்குவதால் அது புனித ராஜ்குமார் நடிக்க இருந்த கதையா? வேறொரு புதிய கதையா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. ஆகவே, விக்ரமின் 62வது படத்தை அஜய் ஞானமுத்து அல்லது பவன்குமார் இயக்குகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement