அமெரிக்காவ கண்டுபுடிச்சதுக்கு முன்னாடியே சோழர்கள் இதையெல்லாம் பண்ணிட்டாங்க – பெருமைகளை பேசி மார்தட்டிய விக்ரம்

0
180
vikram
- Advertisement -

படத்தின் ப்ரோமோஷன் விழாவில் தஞ்சை பெரிய கோவிலின் பெருமையை விக்ரம் கூறியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்து காத்து இருக்கும் பொன்னியின் செல்வன் படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் தான் இயக்கி படத்தை இருக்கிறார். பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-
ponniyin

மேலும், பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியிட இருக்கிறார்கள்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று பொன்னியின் செல்வன் படத்தின் பிரஸ்மீட் மும்பையில் நடந்தது. இதில் விக்ரம், ஜெயம் ரவி உட்பட படக் குழுவினர் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விக்ரம் அவர்கள் தஞ்சை பெரிய கோவில் குறித்தும், ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தை குறித்தும் கூறியிருந்தது, முந்தைய காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் பற்றியும் பண்டைய கால வரலாறு பற்றியும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறோம்.

விழாவில் விக்ரம் கூறியது:

நாம் எகிப்தில் உள்ள பிரமிடுகள் பற்றி பேசுகிறோம். அதை எப்படி கட்டி இருப்பார்கள் என்றெல்லாம் யோசிக்கிறோம். ஆனால், அதேபோல் நாம் இந்தியாவில் நிறைய கோயில்கள் இருக்கின்றன. அதிலும் உலகத்திலேயே உயரமான கோபுரத்தை கொண்ட கோவில் என்றால் தஞ்சை பெரிய கோவில் தான். சோழர்கள் காலத்தில் அந்த கோவில் கட்டப்பட்டது. ராஜராஜ சோழன் தான் அந்த கோவிலை கட்டினார். அந்த கோவில் கோபுரத்தின் உச்சியில் உள்ள கல் மட்டுமே 80 டன் எடை கொண்டது. நமக்கும் பிரமிடுகள் பற்றியும், சைவ கோபுரம் பற்றியும் தான் தெரியுமே தவிர நம்முடைய புகழ் வாய்ந்த தஞ்சை கோவிலை பற்றி பலருக்கும் தெரியாது.

-விளம்பரம்-

தஞ்சை பெரிய கோவில் பெருமை:

ஆனால், கோயில் முன்பு என்று செல்ஃபி போட்டோ எல்லாம் எடுக்கிறோம். பழங்கால கோவிலில் இன்றும் தரமான திடமான பழங்கால கோவில்கள் நம் நாட்டில் இருக்கிறது. தஞ்சை கோவில் பிளாஸ்டர்கள் எதுவுமே பயன்படுத்தாமல் கட்டப்பட்டது. அந்த காலத்தில் எந்தவித இயந்திரங்களும் இல்லாத நிலையில் யானைகள், காளைகள், மனிதர்களின் உதவியுடன் மட்டுமே இந்த கோவிலை கட்டியிருக்கிறார்கள். பிளாஸ்டர்கள் பயன்படுத்தாமல் கட்டப்பட்ட அந்த கோவில் ஆறுமுறை பூகம்பங்களை தாங்கி நின்றது. இதை யாராலுமே நம்ப முடியாது. அந்த கோவில் சுற்றுச்சுவர் பின்னர் ஆறடி நீளத்துக்கு தாழ்வாரம் அமைத்து அதன் பின்னர் மையப்பகுதியில் கோவிலை கட்டியிருக்கின்றனர். அதனால் தான் அது இத்தனை பூகம்பகளையும் தாண்டி இன்றும் நிலைத்து நிற்கிறது.

ராஜராஜ சோழன் குறித்த பெருமை:

அது மட்டும் இல்லாமல் ராஜராஜ சோழன் அவருடைய ஆட்சிக்காலத்தில் 5000 அணைகளை கட்டியிருக்கிறார். அந்த காலத்திலேயே நீர் மேலாண்மை அனைத்தையும் அவர் வைத்திருந்தார். மேலும், ஆண்களின் பெயர்களை மட்டுமே சூட்டி வந்த அந்த காலத்தில் பெண்களின் பெயரை சூட்டி மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தவர் ராஜராஜ சோழன். இலவசமாக மருத்துவமனைகளையும் கட்டி இருக்கிறார். இவை எல்லாம் ஒன்பதாம் நூற்றாண்டிலேயே நடந்தவை. 500 ஆண்டுகள் கழித்து தான் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார். இப்படி நாம் பெருமை மிகுந்த கலாச்சாரத்தைக் கொண்டிருக்கிறோம் என்பதை யோசித்துப் பார்த்தாலே வியப்பாக இருக்கிறது என்று உணர்ச்சிபூர்வமாக விக்ரம் பேசியதை கேட்டு அரங்கமே அதிர்ந்தது. இப்படி அவர் பேசிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement