சினிமாவில் எந்த ஒருபின்னணி இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் ஜெயித்தவர்கள் என்று ஒரு தனி கூட்டம் இருக்கிறது. அவர்களுக்கு என்றும் ரசிகர்கள் மத்தியில் மரியாதையும் அன்பும் உண்டு. அந்த வகையில் உள்ள நடிகர்களில் நாம் அறிந்த சிலர் அஜித், விக்ரம் தான். விக்ரம் அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக ஆக்குவதற்கு சில ஆண்டுகள் ஆகிவிட்டது. அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் விக்ரம் மீது ஒரு தனி மரியாதை உண்டு.

Advertisement

ஏன்னா, அவர் அந்த அளவிற்கு தன் வாழ்க்கையில் போராடி சினிமாவில் உயர்ந்துள்ளார். இவர் சினிமாவில் இந்த உயரத்தை அடைய பல கட்டங்களை கடந்து தான் வந்தார். இந்நிலையில் அஜித்திற்கும், விக்ரமுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. அது என்னவென்றால் அஜித்தைப் போலவே முதலில் சினிமா உலகில் அறிமுகம் ஆவதற்கு விக்ரமும் பல்வேறு கட்டங்களை அனுபவித்தார். அஜித்தைப் போலவே விக்ரமும் திரைப்படத்திற்கு முன்பு பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : இளம் பெண்களுக்கு இவரு மேல க்ரஷ். ஆனால், இவருக்கோ ராஷ்மிகா மேல பெரிய க்ரஷ்ஷாம்.

என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் தான் விக்ரம் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீதரின் தந்துவிட்டேன் என்னை என்ற படத்தில் நடித்தார். ஆனால், இவருக்கு இந்த படங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. மேலும், நடிகர் விக்ரமும் சினிமா உலகில் ஆரம்ப கட்டத்தில் நடிக்கும் போது அவருக்கு ஏற்பட்ட ஒரு விபத்தில் காலில் பெரிய முறிவு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக விக்ரம் நடக்காமல் இருந்தார். பின் தன் நம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும் அவர் மீண்டும் சினிமாவுக்குள் நுழைந்தார்.

Advertisement

Advertisement

அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்தார். இவர் படங்களில் ஓடும்போது பார்த்து பலர் கிண்டல் செய்துள்ளார்கள். அதற்கு காரணம் அவர் காலில் ஏற்பட்ட முறிவு என்பது பலருக்கும் தெரியாது. அதேபோல தான் அஜித்தின் சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஒரு பெரிய விபத்து நடந்து முதுகில் அறுவை சிகிச்சை செய்தார். இது அனைவருக்கும் தெரிந்தது. இவர்கள் இருவருக்கும் இப்படி சில ஒற்றுமைகள் இருந்தாலும் அஜித் நடித்த ஆசை படத்தின் மூலம் கொஞ்சம் சீக்கிரமாக வெற்றி கிடைத்தது. ஆனால், விக்ரமுக்கு பல ஆண்டுகள் கழித்து தான் வெற்றி கிடைத்தது.

இதையும் பாருங்க : சிறையில் மாஸ்க் தயாரிக்கும் நண்பன் பட நடிகர். யார் தெரியுமா ?

ஆனால், விக்ரம் மனமுடைந்து துறையை விட்டு செல்லாமல் போராடினார். தொலைக்காட்சி தொடர்கள், பிற நடிகர்களுக்கு டப்பிங் பேசுதல் என்று சினிமாவிலேயே இருந்தார். அஜித்தின் முதல் படமான அமராவதிக்கு விக்ரம் தான் டப்பிங் கொடுத்திருந்தார். அஜித் மட்டுமில்லாமல் அப்பாஸ், பிரபுதேவா போன்ற பல நடிகர்களுக்கும் இவர் டப்பிங் கொடுத்துள்ளார். பிறகு அஜித்துடன் இணைந்து விக்ரம் உல்லாசம் என்ற படத்தில் நடித்தார். இப்படி விக்ரம் சினிமாவில் வெற்றியடைவதற்கு கொஞ்ச காலம் நீண்டு கொண்டே போனது. பாலாவின் சேது படத்தின் மூலம் மூலம் விக்ரம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார்.

அதனைத் தொடர்ந்து தில்,ஜெமினி, தூள்,சாமி போன்ற பல படங்களும் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் விஜய், அஜித் இருவருக்கும் விக்ரம் டஃப் கொடுக்க ஆரம்பித்தார். பிதாமகன் படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இப்படி தான் நம்முடைய விக்ரம் சியான் ஆக வெற்றியடைந்தார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் போராடி தான் இவர் தற்போது சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார். நடிகர் விக்ரமும், அஜித்தும் பல பேர் வாழ்க்கைக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் என்று சொல்லலாம்.

Advertisement