இளம் பெண்களுக்கு இவரு மேல க்ரஷ். ஆனால், இவருக்கோ ராஷ்மிகா மேல பெரிய க்ரஷ்ஷாம்.

0
22586
rashmika
- Advertisement -

சினிமாவில் ஒரே ஒரு பாடல் மூலம் பிரபலமடைந்த நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அந்த வகையில் இன்கேம் இன்கேம் காவாலி என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை ராஷ்மிக மந்தன. கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தனது முதல் படத்திலேயே அனைவர் மனதை கொள்ளையடித்த இவர், தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். 

-விளம்பரம்-
Rashmika Mandanna Lifestyle, Wiki, Net Worth, Income, Salary ...

அதிலும் கடந்த ஆண்டு வெளியான ‘கீதா கோவிந்தம் ‘படத்தின் மூலம் தமிழ், கன்னடம், மலையாளம் என்று அணைத்து ரசிகர்களையும் ஈர்த்துவிட்டார்.அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் காவாலி என்ற பாடல் அனைவரின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்சிலும் ஆக்கரமிப்பு செய்தது. தற்போது தமிழ் தெலுங்கு, ஹிந்தி என்று பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : சிறையில் மாஸ்க் தயாரிக்கும் நண்பன் பட நடிகர். யார் தெரியுமா ?

- Advertisement -

மேலும், ரெமோ பட இயக்குனர் இயக்கி வரும் ‘சுல்தான்’ என்ற படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடித்து வருகிறார்.இது தான் இவரது முதல் தமிழ் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தான் முதலில் விஜய் 63 படமான பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பார் என்றும் எதிர்பார்க்கபட்டது. ஆனால், இவருக்கு அந்த படத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

சினிமாவில் மட்டுமல்லாது நிஜத்திலும் தனது சுட்டித்தனமான பேச்சால் அனைவரையும் ஈர்த்து வருகிறார். அதிலும் கார்த்தியின் ‘சுல்தான்’ பட பூஜை விழாவில் இவர் தமிழில் பேசி அசத்தியது அனைவரையும் கவர்ந்தது. இதனாலேயே இவர் மீது பல இளசுகளுக்கு ஒரு கண்ணு தான். தற்போது அந்த லிஸ்டில் சேர்ந்துள்ளார் பிரபல பிக் பாஸ் நடிகரான ஹரிஷ் கல்யாண்.

இதையும் பாருங்க : துப்பாக்கி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த நடிகையா இது. வைரலாகும் புகைப்படம்.

-விளம்பரம்-

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 மூலம் பல்வேறு கன்னிகளின் மனதை கொள்ளையடித்தவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானாலும் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ பிக் பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் மூன்று படங்களில் நடித்துவிட்டார். மூன்றுமே செம ஹிட் தான்.

சமீபத்தில் ட்விட்டர் ரசிகர் ஒருவர் ஹரிஷ் கல்யாணிடம், உங்களின் மிகப்பெரிய கிரஷ் யாருனு கேட்க அதற்கு ராஷ்மிகா மந்தனா என்று ட்வீட் செய்துள்ள ஹரிஷ் கல்யாண் ரஷ்மிகா மந்தனாவையும் டேக் செய்துள்ளார். தற்போது  பிரியா பவானி ஷங்கருடன் இணைந்து ஹரிஷ் கல்யாண் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘பெல்லி சூப்புலு’ படத்தின் ரீமேக்கான இந்த படத்தை கார்த்திக் சுந்தர் இயக்குகிறார்.

Advertisement