கலைஞர் குடும்பத்தில் சம்மந்தம்.! ஆனாலும் மறைவுக்கு ஏன் வரவில்லை.? விக்ரம் வெளியிட்ட செய்தி

0
440

திமுக தலைவர் மு கருணாநிதி அவர்கள் நேற்று காலமானதை அடுத்து இன்று மாலை அவரது உடல் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவையொட்டி பல்வேறு அரசியல் பிரமுகர்களும் , திரையுலக பிரபலங்களும் கலைஞர் அவர்களின் இறுதி சடங்கில் பங்கேற்றனர்.ஆனால், கலைஞர் குடும்பத்தின் சம்மந்தியான நடிகர் விக்ரம், கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்கவில்லை.

vikram

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வரும் விக்ரம் தற்போது கௌதம் மேனன் இயக்கி வரும் ‘துருவநட்சத்திரம்’ படத்திலும், ஹரி இயக்கியுள்ள ‘சாமி 2 ‘ படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான ஷூட்டிங் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் விக்ரம், கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்காதது கேள்விக்குரிய விடயமாக மாறியுதுள்ளது.

விக்ரம் ஒரு நடிகர் என்பதை விட கலைஞர் குடும்பத்திற்கு சம்மந்தியாவர். கடந்த அக்டோபர் மாதம் தான் விக்ரமின் மகள் பிரபல கெவின் கேர் நிறுனத்தின் உரிமையாளர் சி கே ரங்கநாதனின் மகன் அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அஸ்வின், கலைஞர் கருணாநிதியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikram-Daughter-Akshita

அப்படி இருக்க, விக்ரம் அவர்கள், கலைஞரின் மறைவிற்கு ஏன் இன்று நேரில் வந்து இரங்கல் தெரிவிக்கவில்லை என்ற கேள்வி பலர் மனதிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காகததற்கான காரணத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் விக்ரம். சமீபத்தில் இரங்கல் செய்தி அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம் இதோ.