பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். இவர் சினிமாவில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் திரை உலகில் நுழைந்து தன்னுடைய கடும் உழைப்பினால் தனெக்கென ஒரு முத்திரையை பதித்து இருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து இருக்கிறார். மேலும், சீயான் விக்ரம் என்றாலே நடிப்புக்காக எப்பேர்பட்ட வேடங்களையும் எதையும் துணிந்து செய்வார் என்று நாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். விக்ரம் நடிப்பில் வெளிவந்த மகான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் “கோப்ரா” படத்தில் நடித்து இருந்தார். இந்த கோப்ரா படத்தில் வித விதமான கெட்டப்புகளில் விக்ரம் நடித்து இருந்தார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து இருந்தார். இவர்களுடன் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் முக்கிய வேடத்தில்நடித்து இருந்தார். மேலும், ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இந்த படத்திற்கு இசையமைத்துஇருந்தார். மிகுந்த பொருட்செலவில் உருவான இந்த படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.
விக்ரம் நடிக்கும் படங்கள்:
என்ன தான் இந்த படத்தில் விக்ரம் பல விதமான கெட்டப்பில் வந்தாலும் அது கதைக்கு பலம் சேர்க்கவில்லை. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தன் வீட்டில் பணியாற்றும் ஊழியரின் மகனின் திருமணத்திற்கு விக்ரம் செய்து இருக்கும் செயல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் விக்ரம் வீட்டில் பல வருடங்களாக மேரி மற்றும் அவரது கணவர் ஒளிமாறன் இருவரும் பணிபுரிந்து வந்தவர்கள். இடையில் கணவர் ஒளிமாறன் மறைந்த பின்பும் மேரி சுமார் 40 வருடங்களாக விக்ரம் வீட்டில் பணியாற்றி இருக்கிறார்.
மேரி மகனின் திருமணம்:
இந்நிலையில் மேரியின் மகன் தீபக் என்பவருக்கும் மணமகள் வர்ஷினி என்பவருக்கும் திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் சில தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் நடிகர் விக்ரம் பளபளவெனப் பட்டு வேட்டி சட்டையில் கலந்து கொண்டு தாலி எடுத்து கொடுத்து மணமக்களை வாழ்த்தினார். இந்நிலையில் திருமணத்தில் விக்ரம் கலந்து கொண்டது குறித்து மேரி கணவனின் தம்பி பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, என்னுடைய அண்ணன், அண்ணி, நான் என மொத்த குடும்பமே விக்ரம் சார் வீட்டில் தான் வேலை பார்த்துக்கொண்டு வருகிறோம்.
மேரி குடும்பத்தினர் அளித்த பேட்டி:
அண்ணன் இறந்து விட்டார். நாங்கள் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை பெசன்ட் நகர். எங்களை மாதிரி ஏழைகளுக்கு சொந்த வீடெல்லாம் கனவு மாதிரி. அதுவும் பெசன்ட் நகரில் நினைத்து கூட பார்க்க முடியாது. ஆனால், விக்ரம் சாரும், மேடமும் தங்கறதுக்கு வீடு இல்லை என்று பெசன்ட் நகரிலேயே எங்கள் குடும்பத்திற்கு வீடு வாங்கி கொடுத்தார்கள். பொதுவாக வேலை பார்க்கிறவங்க கிட்ட ரொம்ப பாசமாக இருப்பார் விக்ரம் சார். இவங்க நம்ம வீட்டில் வேலை செய்றவங்க தானே, நமக்கு என்னவென்று விடமாட்டார். என்னுடைய அண்ணன் பிள்ளைகள் இரண்டு பேரையுமே விக்ரம் சார் தான் படிக்க வைத்தார்.
விக்ரம் குறித்து சொன்னது:
இப்படி எல்லா நல்லதையும் செய்த விக்ரம் சார் திருமணத்தை செய்து வைக்காமல் இருப்பாரா? மாப்பிள்ளை வீட்டோட எல்லா செலவையும் அவரே ஏற்றுக் கொண்டார். ரிசப்ஷனை ரொம்ப கிராண்டாக பண்ணி கொடுத்தார். விக்ரம் சார் ஆசீர்வாதம் செய்தது எங்களுக்கு கடவுளே நேரில் வந்து வாழ்த்தின மாதிரி இருந்தது. மாலையில் நீலாங்கரையில் ரிசப்ஷன் வைத்திருந்தோம். விக்ரம் சாருடைய மனைவி, மகன் துருவ் சார்னு எல்லாரும் நேரில் வந்து மனசார வாழ்த்தி இருந்தார்கள். விக்ரம் சார் ரொம்ப மனிதநேயமிக்கவர். ரொம்ப ஜாலியாக பேசுவார். திருமணத்திற்கு வந்து மாப்பிள்ளைக்கு சட்டை, மாலை எல்லாம் சரி செய்து இருந்தார். அதேபோல் துருவ் சாரும் ரிசப்ஷனுக்கு வந்து எல்லோருடனும் கை போட்டுக்கிட்டு போட்டோ எல்லாம் எடுத்திருந்தார். விக்ரம் சாரும் அவங்க குடும்பமும் நல்லா இருக்கணும் என்று கூறியிருக்கிறார்.