இன்று கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி திரைத் துறையினர் பல்வேறு பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்களின் வரிசையில் நடிகர் விக்ரம், மலேசியாவில் நடைபெற்றுவரும் தன் `கடாரம் கொண்டான்’ பட ஷூட்டிங் ஸ்பார்ட்டில் இருந்து படக்குழுவினருடன் இணைந்து வீடியோ மூலம் கமலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். .சாமி ஸ்கொயர் படத்தையடுத்து சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம் `கடாரம் கொண்டான்’. இந்தப் படத்தில் விக்ரமுடன் அக்ஷராஹாசன் ஜோடியாக நடிக்கிறார் . கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷ்னல் மற்றும் டிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.Happy Birthday ikamalhaasan sir pic.twitter.com/wL9OGR2FPd
— Chiyaan Vikram (@Actor_Vikram) November 7, 2018
சினிமாReading time · 1 min





