சினிமாவில் எந்த ஒருபின்னணி இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் ஜெயித்தவர் நடிகர் விக்ரம். விக்ரம் அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக ஆகுவதற்கு சில ஆண்டுகள் ஆகிவிட்டது. ஏன்னா, அவர் அந்த அளவிற்கு தன் வாழ்க்கையில் போராடி சினிமாவில் உயர்ந்து உள்ளார். இவர் சினிமாவில் இந்த உயரத்தை அடைய பல கஷ்ட்டங்களை கடந்து தான் வந்தார். தற்போது அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் விக்ரம் மீது ஒரு தனி மரியாதை உண்டு. விக்ரம் திரைப்படத்திற்கு முன்பு பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.
என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் தான் விக்ரம் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீதரின் தந்துவிட்டேன் என்னை தொடர்ந்து படத்தில் நடித்தார். ஆனால், இவருக்கு இந்த படங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. விக்ரம் மனமுடைந்து துறையை விட்டு செல்லாமல் போராடினார்.
தொலைக்காட்சி தொடர்கள், பிற நடிகர்களுக்கு டப்பிங் பேசுதல் என்று சினிமாவிலேயே இருந்தார். பின் பல வருடங்கள் போராடிய விக்ரமுக்கு சேது படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தில், ஜெமினி, தூள், சாமி போன்ற பல படங்கள் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது.
அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் விஜய், அஜித் சினிமாவில் விக்ரம் டஃப் கொடுக்க ஆரம்பித்தார். தற்போது தற்போது சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார். மேலும், இன்று சியான் விக்ரம் அவர்களின் பிறந்தநாள். இதனால் சமூக வலைத்தளங்களில் எல்லாம் ரசிகர்கள் சீயான் விக்ரமுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் விக்ரம் உடன் பிறந்த சகோதரர் விக்ரம் குறித்து சில சுவாரசியமான விஷயங்களை பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, விக்ரம் சினிமா வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறார். ஆனால், ஒரு போதும் சினிமாவில் இருந்து விலக போகிறேன் என்று சொன்னதே இல்லை பல கஷ்டங்களுக்கு பிறகு தான் அவர் சினிமா உலகில் உயர்ந்த இடத்தில் உள்ளார். அதனால் அவர் அடிக்கடி என்னிடமும், அவருடைய மகன் துருவ் இடமும் நான் பட்ட கஷ்டங்களை நீங்கள் படக்கூடாது என்று சொல்லுவார்.
அதற்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வார். அதிலும் துருவின் படங்கள் விஷயத்தில் கதைகளை எல்லாம் விக்ரம் தான் தேர்ந்தெடுப்பார் என்று கூறினார். நடிகர் விக்ரமின் சகோதரர் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விக்ரம் அவர்கள் தற்போது கோப்ரா என்ற படத்தில் வித விதமான கெட்டப்புகளில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ் எஸ் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வரப்போகிறது என்றும் கூறப்படுகிறது