கொரோனாவால் கொத்தப்பட்ட கோப்ரா படக்குழு. சோகத்தில் விக்ரம்.

0
1346
cobra
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் திரை உலகில் தனெக்கென ஒரு பாதையை உருவாக்கியவர் நடிகர் விக்ரம். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து உள்ளார். தமிழ் சினிமாவில் சிவாஜி, கமலுக்கு பின்னர் அதிக கெட்டப் போட்டு நடிப்பவர் இவர் தான். கடந்த ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த கடாரம் கொண்டான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் “கோப்ரா”. நடிகர் விக்ரம் அவர்கள் இந்த கோப்ரா படத்தில் ஒரு மிகப் பெரிய சாதனை செய்து உள்ளார். அதாவது நடிகர் விக்ரம் இந்த கோப்ரா படத்தில் வித விதமான கெட்டப்புகளில் வருகிறார்.

-விளம்பரம்-
Image result for corona virus

- Advertisement -

இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார். ஹரிஸ் கண்ணன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ் எஸ் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வரப்போகிறது. சமீபத்தில் தான் விக்ரமின் கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கரோனா வைரஸ் குறித்து கூறி உள்ளார். தற்போது உலகம் முழுவதும் பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது இந்த கரோனா வைரஸ். உலகம் முழுவதும் உள்ள 24 நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கரோனா வைரஸினால் 50,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து தான் இந்த கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. தற்போது இது உலகில் பல இடங்களில் பரவி வருகிறது.

-விளம்பரம்-
Image result for cobra  first look

இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள். இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த கரோனா வைரஸினால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் சூட்டிங்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோப்ரா படக்குழுவினர் பாதி சூட்டிங்கிலேயே ரஷியாவில் இருந்து இந்தியாவிற்கு திரும்பி விட்டார்கள். இதுகுறித்து கோப்ரா படத்தின் இயக்குனர் ட்விட்டர் கூறி இருப்பது, இந்த கரோனா வைரஸ் மக்களை மட்டுமில்லாமல் சினிமா படங்களையும் மிகவும் பாதித்து வருகிறது என்று வேதனையுடன் கூறியிருந்தார்.

Advertisement