மும்பையில் தவித்த மதுரை தமிழர்கள். 90 பேருக்கு சொந்த ஊர் செல்ல உதவிய விக்ரம் பட இயக்குநர்.

0
652
susi
- Advertisement -

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவை மே 28 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்குகிறார்கள். சினிமா முதல் சின்னத்திரை என அனைத்து படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவால் பல பேர் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் மும்பையில் சிக்கித் தவித்த 90 தமிழர்களை பிரபல இயக்குனர் ஒருவர் ஐஏஎஸ் அதிகாரி உதவி மூலம் அவர்களை மீட்டு சொந்த ஊர் அனுப்பி வைத்துள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

ஐ. ஏ.எஸ் அதிகாரியின் அயராத முயர்ச்சி���மும்பையில் இட்லி வியாபாரம் செய்யும் மதுரை , விருதுநகர் – ஐ சேர்ந்த சுமார் 90…

Susi Ganeshan ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಭಾನುವಾರ, ಮೇ 17, 2020

சினேகா-பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த படம் விரும்புகிறேன். இந்த படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர் இயக்குனர் சுசி கணேசன். இந்த படத்தை தொடர்ந்து இவர் பைவ் ஸ்டார், திருட்டுப்பயலே, கந்தசாமி, திருட்டுப்பயலே-2 என பல படங்களை இயக்கி உள்ளார். தற்போது இவர் மும்பையில் வசித்து வருகிறார். மேலும், இவர் சில இந்தி படங்களையும் இயக்கி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் கொரோனா பரவல் தாக்கம் இந்தியாவில் அதிகமாகி வருவதால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. இந்த சூழலில் மதுரை மற்றும் விருதுநகரை சேர்ந்த 90 தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் மும்பையில் தவித்து வந்தனர். இதை அறிந்த இயக்குனர் சுசி கணேசன் அவர்கள் தனக்கு தெரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அன்பழகன் உதவி மூலம் அந்த 90 தமிழர்களையும் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்ப அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார்.

இவரின் இந்த செயல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இயக்குனர் சுசி கணேசன் அவர்களின் செயலை பாராட்டி பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஐ.ஏ.எஸ். என்பது கவுரவ பதவியல்ல. மக்களுக்கு எதை வேண்டுமானாலும் துணிச்சலுடன் களமிறங்கி செய்யும் பதவி என்பதை செய்து விட்டார் ஐ.ஏ.எஸ். அதிகாரி அன்பழகன். ஐ.ஏ.எஸ். அதிகாரி அன்பழகன் செய்த உதவிக்கு நன்றிகள் பல அன்பழகன் புரோ என்று இயக்குனர் சுசி கணேசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement