பொன்னியின் செல்வன் படத்திற்காக மீண்டும் சிக்ஸ் பேக் வைத்த விக்ரம் – வைரலாகும் புகைப்படம்.

0
2965
vikram
- Advertisement -

சினிமாவில் எந்த ஒருபின்னணி இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் விக்ரம். தமிழ் சினிமாவில் சிவாஜி, கமலுக்கு பின்னர் நடிப்பிற்கு ஒரு உதாரணமாக திகழ்வது நடிகர் விக்ரம் தான். கடந்த ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த கடாரம் கொண்டான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் விக்ரம் படத்திற்காக கெட்டப் மாற்றுவது உடல் எடையை கூட்டுவது, சிக்ஸ் பேக் வைப்பதை எல்லாம் சர்வ சாதாரணமாக செய்து வருபவர்.

இப்படி ஒரு நிலையில் நடிகர் விக்ரம் மீண்டும் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. விக்ரம் தற்போது கோப்ரா,பொன்னியின் செல்வன் என்று இரண்டு படங்களில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒரு வரலாற்று சரித்திர படம் என்பதால் அந்த படத்திற்காக தான் நடிகர் விக்ரம் இப்படி சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம்.சோழ மன்னர்களின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது தான் கல்கி. ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட சில விஷயங்களால் அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இயக்குனர் மணிரத்னம் தற்போது நீண்ட நாள் கனவான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இப்போது மீண்டும் கையில் எடுத்திருக்கிறார்.

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா , அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரங்களை வைத்து இம்முறை ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குகிறார் மணிரத்தனம். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.

-விளம்பரம்-
Advertisement