‘பரவாயில்ல இருக்கட்டும்’ சற்றும் யோசிக்காமல் கீழே தவறவிட்ட செருப்பை கையால் எடுத்துகொடுக்க முயன்ற விக்ரம்

0
442
- Advertisement -

தங்கலான் பட புரோமோஷன் போது நடிகர் விக்ரம் செய்திருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விக்ரம். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. இவர் சினிமாவில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல், தன்னுடைய கடும் உழைப்பினால் தனெக்கென ஒரு முத்திரையை பதித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து இருக்கிறார். மேலும், தமிழ் சினிமாவில் சிவாஜி, கமலுக்கு பின்னர் நடிப்பிற்கு ஒரு உதாரணமாக இருப்பவர் என்றால் அது விக்ரம் என்றே சொல்லலாம். அது மட்டும் இல்லாமல் இவர் நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்ல கூடியவர். அந்த வகையில் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்திருக்கும் படம் ‘தங்கலான்’.

- Advertisement -

தங்கலான் படம்:

கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் இன்று ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகி இருக்கிறது.

தங்கலான் பட ப்ரோமோஷன் :

மேலும், கடந்த வாரம் முதல் இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று இருந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விழாவில் நடிகர் விக்ரம் செய்திருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தங்கலான் படத்தின் பிரமோஷன் போது நடிகர் விக்ரம் உட்பட படக்குழுவினர் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

விக்ரம் செய்த செயல் :

அப்போது நபர் ஒருவர் தன்னுடைய செருப்பை தவற விட்டிருக்கிறார். உடனே விக்ரம் கொஞ்சம் கூட யோசிக்காமல் அந்த செருப்பை எடுத்து தரப் போனார். உடனே, அந்த நபர் தடுத்து அந்த செருப்பை அவரே எடுத்து கொண்டார். தன் அருகில் ஜி வி பிரகாஷ், ரஞ்சித் என பல பிரபலங்கள் இருந்தோமே அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் விக்ரம் செய்து இருக்கும் செயலை தான் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

விக்ரம் திரைப்பயணம் :

தற்போது விக்ரம் அவர்கள் அருண் குமார் இயக்கத்தில் வீரா தீரா சூரன் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன் உட்பட பிரபலங்கள் பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசை அமைக்கிறார். இதை அடுத்து இன்னும் சில படங்களில் விக்ரம் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

Advertisement