புனீத் பாணியில் தன் படத்தின் ப்ரோமோஷனை செய்த கமல் – ரசிகர்களுக்கு கொடுத்த சர்ப்ரைஸ்.

0
368
kamal
- Advertisement -

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் தனது ரசிகர்களுக்கு செய்த செயலை தற்போது கமலஹாசன் காப்பியடித்து தன்னுடைய ரசிகர்களுக்கு செய்திருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு இருக்கிறார். தற்போது இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விக்ரம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-
vikram

இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இது கமலின் 232 படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி கேங் ஸ்டாராக மிரட்டி இருக்கிறார். ஜெயிலில் இருக்கும் விஜய் சேதுபதியை காப்பாற்ற பகத் பாசில் முயற்சி செய்கிறார்.

இதையும் பாருங்க : கல்யாண கலைகட்டிய கண்ணன் வீடு – குவிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்கள். திருமணம் எப்போ கண்ணன் ?

- Advertisement -

விக்ரம் படத்தின் கதை:

இவர்களின் திட்டத்தை புரிந்து கொண்ட கமல் அவர்களின் முயற்சியை முறியடிக்க போராடுகிறார். இதனால் அடுத்தடுத்து நடக்கும் ஆக்ஷன் தான் படத்தின் கதை. சமீபத்தில் தான் விக்ரம் படத்தின் முதல் பாடல் பத்தல பத்தல வெளியாகி இருந்தது. இந்த பாடலை கமல் எழுதி பாடி இருந்தார். அதுவும் இந்த பாடல் சென்னை தமிழில் பாடி இருந்தார். மேலும், இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. அதோடு இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக கமலின் விக்ரம் படம் அமைந்திருக்கிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழா:

மேலும், இந்த படம் ஜூன் மூன்றாம் தேதி வெளிவர இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் மே 15ஆம் தேதி விக்ரம் படத்தின் இசை வெளியிட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீடு ஆகியவை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. இதில் விக்ரம் படத்தின் படக்குழுவினரை தவிர இயக்குனர் பா ரஞ்சித், சிம்பு, உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், காளிதாஸ் ஜெயராம் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல்வேறு விஷயங்களை பல பிரபலங்கள் பேசி இருந்தார்கள்.

-விளம்பரம்-

கமல் ரசிகர்களுக்கு கொடுத்த சர்ப்ரைஸ் :

மேலும், நடந்த முடிந்த விக்ரம் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ லான்ச் விழா விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்திருந்தார்கள். இந்த நிலையில் மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார் செய்ததை தற்போது கமல் செய்து இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், விக்ரம் படம் குறித்தும், கமல் குறித்தும் தங்களுடைய கருத்துகளை ரசிகர்கள் ஒவ்வொருவரும் கூறி இருந்தார்கள். அவர்களுக்கு தெரியாமலேயே அவர் பின்னால் இருந்து கமல் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

வைரலாகும் வீடியோ:

கமல் கொடுத்திருக்கும் சர்ப்ரைஸ் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. ஆனால், இதற்கு முன்பே மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் தன்னுடைய ரசிகர்களுக்கு இந்த மாதிரி சர்ப்ரைஸ் கொடுத்து இருந்தார். இதைத்தான் தற்போது கமல் காப்பி அடித்து செய்திருக்கிறார். இதை பார்த்து நெட்டிசன்கள் பலரும் விமர்சித்தும், வீடியோக்களை வைரலாக்கியும் வருகிறார்கள்.

Advertisement