பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வீட்டில் நடந்த திருமண விசேஷம் தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலை வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அதோடு இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது.
அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பி வருகிறார்கள். தெலுங்கில் வடிநம்மா என்ற பெயரிலும், கன்னடத்தில் வரலக்ஷ்மி வடிநம்மா என இந்தியாவில் 8 மொழிகளிலும் இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வருவது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியல். மேலும், இந்த சீரியலில் கதிர்– முல்லை ரொமான்ஸ், கெமிஸ்ட்ரியும் வேற லெவல்.
கண்ணன்-ஐஸ்வர்யா:
இந்த சீரியல் இந்த அளவுக்கு ஹிட் ஆனதற்கு காரணமானவர்களுள் இவர்களும் ஒருவர். அதேபோல் இந்த சீரியலில் அனைவருக்கும் ஜோடி இருக்கிறார்கள். கடைக்குட்டியாக இருந்து வரும் கண்ணனின் குறும்பும்,சேட்டையும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்து வருகிறது. இவர் ஐஸ்வர்யா என்பவரை காதலித்து இருந்தார். பின் வீட்டிற்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள். மேலும், பல போராட்டங்களுக்கு பின் இருவரையும் மூர்த்தி குடும்பம் ஏற்று கொள்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கதை:
கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்த சாய் காயத்ரி நடித்து வருகிறார். தற்போது சீரியலில் மெகா சங்கமம் முடிவடைந்து பாண்டியன் ஸ்டோர் குடும்பம் தங்களின் வீட்டிற்கு வந்து இருக்கிறார்கள். அப்போது கடையில் சாஃப்ட்வேர் வைப்பது குறித்து மீனாவிடம் கேட்கிறார்கள். மீனாவும் என்னுடைய நண்பர் ஒருவரிடம் சொல்லி இருக்கிறேன். அவர் 15000 ரூபாய் பணம் கேட்கிறார் என்று சொன்னவுடன் மூர்த்தி அவ்வளவு பணமா! என்று ஷாக்காகி நான் ஜீவாவிடம் சொல்கிறேன் என்று கூறுகிறார். உடனே மீனா கோபப்பட்டு முல்லைக்கு நீங்கள் லட்சக்கணக்கில் செலவு செய்கிறீர்கள்.
சரவணா விக்ரம் வீட்டில் பற்றிய தகவல்:
ஆனால், 15000 ரூபாய்க்கு என்னை நம்பவில்லை என்று கோபப்பட்டு உள்ளே செல்கிறார். இதனால் வீட்டில் எல்லோருமே சோகத்தில் இருக்கிறார்கள். இப்படி பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது இந்த நிலையில் கண்ணன் வீட்டில் விசேஷம் நடந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் உண்மையான பெயர் சரவணா விக்ரம். இவர் முதன் முதலில் ‘கண்மணி’ என்ற குறும்படம் மூலம் தான் அறியப்பட்டார். அதே போல இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சின்னத்தம்பி’ சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி இருந்தார்.
சரவணா விக்ரம் வீட்டில் விசேஷம்:
ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இந்த நிலையில் சரவணா விக்ரம் வீட்டில் அவருடைய தங்கைக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. அண்மையில் மிகவும் கோலாகலமாக இவருடைய தங்கை நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் கலந்துகொண்டிருந்தார். மேலும், நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் சரவணா விக்ரம் இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.