படத்துக்கான 4 வருட உழைப்பை சற்றும் தயங்காமல் புற்று நோயாளிகளுக்கு தானமாக கொடுத்த விக்ரம் மருமகன்

0
2583
vikram
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் தன்னுடைய கடின உழைப்பால் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சியான் விக்ரம். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்தது. அதிலும் சமீபகாலமாக இவர் நடிப்பில் வரும் படங்கள் எல்லாம் வேற லெவல் என்று சொல்லலாம். தற்போது நடிகர் விக்ரம் அவர்கள் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். மேலும், நடிகர் விக்ரம் அவர்களின் மகன் துருவ் விக்ரமும் படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

தற்போது விக்ரம் அவர்கள் தன் மகனுடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான் எனும் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து மணிரத்தினம் அவர்களின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவரது குடும்பத்தில் மற்றொருவரும் சினிமாவில் நடிக்க உள்ளார் என்ற தகவலும் சமூகவலைத்தளங்களில் வந்துகொண்டு இருந்தது. இது அனைவரும் அறிந்த ஒன்றே.

இதையும் பாருங்க : அறம் படத்தில் அப்பாவி அம்மாவா நடித்த நடிகையா நிஜத்தில் இப்படி ஒரு கிளாமரில்.

- Advertisement -

இந்நிலையில் விக்ரம் அவர்களின் மருமகன் செய்த செயல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விக்ரம் அவர்களின் மகள் அக்ஷரா, மனோ ரஞ்சித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மனோ ரஞ்சித் வேற யாரும் இல்லைங்க திமுக கருணாநிதி பேரனும் சி கே ரங்கநாதன் மகன் ஆவார். மனோ ரஞ்சித் தான் தற்போது சினிமாவில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக இவர் 4 வருடங்களாக படத்தில் நடிப்பதற்காக முடி வளர்த்துள்ளார். இவர் நடிக்கும் படத்தில் இவருக்கு ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் என்பதால் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளாராம். ஆனால், சமீபத்தில் இவர் வளர்த்த முடியை தானமாக கொடுத்துள்ளார். இது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அது என்னவென்றால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு தேவைப்பட்டதால் தனது முடியை தானமாக கொடுத்துள்ளார். தற்போது இவரின் செயலால் சோசியல் மீடியாவில் இவருக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளம் சேர்ந்துள்ளது. பலரும் இவருடைய செயலை குறித்து பாராட்டி வருகின்றனர். மேலும், நடிப்பை விட மனிதாபிமானம் தான் முக்கியம் என்பதை இவருடைய செயல் உள்ளது என்றும் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement