பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரித்திக் ரோஷன் அவர்கள் தற்போது தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி உள்ளார் என்றும் இதனால் தயாரிப்பாளர்கள் எல்லோரும் சோகத்தில் உள்ளார்கள் என்றும் தெரிய வந்து உள்ளது. உலக அளவில் உள்ள ரசிகர்களை அழகால் தன் பக்கம் இழுத்தவர் நடிகர் ரித்திக் ரோஷன். அதுமட்டும் இல்லாமல் இவரை ஆணழகன் என்று தான் கூறுவார்கள். மேலும், இளைஞர்கள் பட்டாளத்தை விட பெண்களின் கூட்டம் தான் இவருக்கு அதிகம். அந்த அளவிற்கு தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இந்திய சினிமாவை உலக அளவிற்கு எடுத்து சென்ற ஹீரோக்களில் நடிகர் ரித்திக் ரோஷனும் ஒருவர். மேலும்,இவர் 1980 களில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமானாலும் தற்போது வரை சினிமா உலகில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்.
மேலும், ரித்திக் ரோஷன் நடிப்பில் சமீபத்தில் வெளியான “வார்” திரைப் படம் மூலம் மீண்டும் சினிமாவில் தன் இடத்தை பிடித்து விட்டார். மேலும், இந்த படம் உலக அளவில் உள்ள மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்றும் கூறி வருகிறார். மேலும், இந்த “வார்” திரைப் படம் சுமார் 150 கோடி செலவில் உருவாகி உலகம் முழுவதும் வெளியானது. பின் இந்த படம் 400 கோடிக்கு ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது.
இதையும் பாருங்க : பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் இனி இந்த நடிகை வரமாட்டாரா ? இப்படி பண்ணா பாவம் என்ன பண்ணுவாங்க.
இப்படி ஒரு நிலையில் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘விக்ரம் வேதா’ படத்தின் இந்தி ரீ -மேக்கில் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பதாக இருந்தது. இப்படி ஒரு நிலையில் அவர் இந்த படத்தில் இருந்து வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது தீபிகா படுகோனுடன் பைட்டர் படத்தில் நடிக்கிறார். கொரோனாவால் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது. கொரோனா பாதிப்பும் தணிந்ததும் பைட்டர் படப்பிடிப்பு தொடங்கும். அதையடுத்து க்ரிஷ் 4 படத்தில் நடிக்கிறார்.
அத்துடன் பிரிட்டன் டிவி சீரிஸான தி நைட் மேனேஜரை, இந்தியில் ஹிர்த்திக் ரோஷனை வைத்து எடுக்க டிஸ்னி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த மூன்று புராஜெக்ட்கள் வரிசைகட்டி நிற்பதால் விக்ரம் வேதா இந்திப் பதிப்பிற்கு கால்ஷீட் தர முடியாத சூழல். அதன் காரணமாகவே ஹிர்த்திக் விக்ரம் வேதாவிலிருந்து வெளியேறுகிறார் என்கிறார்கள் பாலிவுட்டில். இன்னும் ஒரு சில நாளில் இந்த படத்தில் ஹ்ரித்திக் நடிக்கிறாரா இல்லையா என்பது தெரிந்துவிடும்.