விக்ரம் படத்தில் நடித்த மூன்று சின்னத்திரை பிரபலங்கள் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள்.

படத்தின் திரைக்கதையில் உள்ள வேகமும், விறுவிறுப்பும் பார்வையாளர்களை பார்க்க தூண்டுகிறது.
ஒவ்வொரு காட்சியிலும் கமலும், லோகேஷ் கனகராஜ் மெனக்கெட்டு மாஸ் காட்டி இருக்கிறார்கள். விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது.
இந்நிலையில் விக்ரம் படத்தில் மூன்று சின்னத்திரை நடிகைகள் நடித்தது குறித்து சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மைனா நந்தினி, சிவானி, விஜே மகேஸ்வரி ஆகிய 3 பேரும் தான் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்து இருக்கிறார்கள்.

Advertisement

மைனா நந்தினி:

விஜய் டிவி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் தான் மைனா நந்தினி. ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலக்கிக் கொண்டிருந்த மைனா நந்தினி வெள்ளித்திரையில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இயல்பான தோற்றம், காமெடி பேச்சு மூலம் ரசிகர்களை கவர்ந்த நந்தினி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் அரண்மனை 3. இந்த படத்தில் இவர் விவேக்கு ஜோடியாக நடித்து இருந்தார். தற்போது விக்ரம் படத்தில் நடித்து இருக்கிறார்.

ஷிவானி :

சிவானி இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியலில் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தார். அதற்கு பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். ஆர்ஜே பாலாஜி படத்திலும், வடிவேலு படத்திலும் இவர் நடித்து கொண்டிருக்கிறார். தற்போது விக்ரம் படத்தில் ஷிவானி நடித்து இருக்கிறார்.

Advertisement

விஜே மகேஸ்வரி:

ஆங்கரிங்காக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் விஜே மகேஸ்வரி. பின் இவர் சின்னத்திரை சீரியலில் நடித்து இருக்கிறார். அதோடு, சென்னை 28- 2, பானா காத்தாடி போன்ற பல படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் விஜே மகேஸ்வரி நடித்திருக்கிறார். இருந்தாலும் இவர் சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்து வைத்திருக்கிறார். தற்போது விஜே மகேஸ்வரி விக்ரம் படத்திலும் நடித்திருக்கிறார்.

Advertisement

பாரட்டை பெரும் மகேஸ்வரி :

இப்படி இந்த 3 நடிகைகள் தான் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி சோபா மீது உட்கார்ந்து இருக்க அவரின் அருகில் இந்த மூன்று நடிகைகளும் அமர்ந்திருக்கிறார்கள். இந்த படத்தில் இடம்பெறும் இந்த காட்சியை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்த பலரும் vj மகேஸ்வரியை தான் அதிகம் பாராட்டி வருகின்றனர், அதிலும் குறிப்பாக ‘heart எந்த பக்கம் இருக்கு’ என்ற வசனத்தை போட்டு பலரும் vj மகேஸ்வரியை தான் பாராட்டி வருகின்றனர்.

Advertisement