மணிரத்னம், ஜெயேந்திரா பஞ்சாபகேசன் தயாரிப்பில் நெட்ஃபிளிக்ஸில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான ஆந்தாலஜி வகை வெப் சீரிஸ் ‘நவரசா’. 9 கதைகள் கொண்ட இந்த சீரிஸ்ஸில் சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சித்தார்த், பிரகாஷ் ராஜ், பார்வதி, ரேவதி, ரோகிணி எனப் பல முக்கியமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, அமைதி என்னும் ஒன்பது அபிநயங்களை கருப்பொருளாகக் கொண்டு இந்த ஆந்தலாஜி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், ஹாஸ்யம் என்ற உணர்வை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பகுதி தான் பிரியதர்ஷனின் ‘”சம்மர் ஆப் 92″‘ யோகி பாபு ரம்யா நம்பீசன் போன்றவர்கள் நடித்த இந்த கதையை பிரபல பத்திரிகையாளர் விக்ரமன் கடுமையாக விமர்சித்து ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில்,நவரசா, நடிகர் யோகிபாபுவை வைத்து திரு.மணிரத்னம் தயாரித்த படத்தை பார்த்தேன். நகைச்சுவை எனும் பெயரில் மலம் அள்ளுபவர்களின் வாழ்வியலை இழிவுபடுத்தியும், பார்ப்பனர்களின் வீடுகள் சுத்தபத்தமானது என்றும் காட்டுகிறார்கள்.

இதையும் பாருங்க : என்ன மாங்கனி இதெல்லாம், வாய்ப்பு இல்லையா – அனு இம்மானுவேலின் முதல் கிளாமர் போட்டோ ஷூட்டை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.

Advertisement

திரு.மணிரத்னம் அவர்களின் மூளையிலிருந்து தான் முடைநாற்றம் வீசுகிறது என்று பதிவிட்டுள்ளார். அதே போல மற்றொரு டீவீட்டில், நூலான்களை அப்புறப்படுத்தாமல் Netflixற்கு தமிழ்நாட்டிலிருந்து ஒரு நோலான் கிடைக்கப் போவதில்லை என்றும் பதிவிட்டுள்ளார் விக்ரமன். இவரின் இந்த பதிவை ட்விட்டரில் பலர் ஆதரித்தும் பலர் விமர்சித்தும் வருகின்றனர்.

ஏற்கனவே, இந்த நவராசா வெப் தொடரை வெளியிட்ட Netflixயையும், கிட்டார் கம்பி மேலே நின்று பகுதியை இயக்கிய கவுதம் மேனனையும் ‘மாடத்தி’ பட பெண் இயக்குனர் லீனா மணிமேகலை கடுமையாக சாடி இருந்தார். இதுகுறித்து பதிவிட்டு இருந்த அவர், இயக்குனர் கௌதம்மேனனை குறிப்பிட்டு காதல் என்ற பெயரில் போலியான பிம்பத்தை காட்டாதீர்கள் மேலும் இது போன்ற கேவலத்தையும் ரொமான்ஸ் என்று விற்பதை நிறுத்துங்கள் என்று கடுமையாக தெரிவித்திருந்தார்.

Advertisement

அதே போல Netflix குறித்து விமர்சித்த அவர், அமெரிக்காவில் சமூக நீதி பேசும் நீங்கள் இந்தியாவில் சாதியத்தை ஆதரிக்கிறீர்கள் வளர்ப்பதற்காக பல இயக்குனர்களை முன்னிறுத்தி பத்து வருடங்களுக்கு முன் தொடங்கிய நெட்ப்ளிக்ஸ் இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட பார்ப்பன சாதியை ஆதரிப்பதாக அமைந்துள்ளதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது என்று பதிவிட்டிருந்தார் லீனா மணிமேகலை.

Advertisement
Advertisement