வில்லேஜ் குக்கிங் டீம் பயன்படுத்தும் விலை உயர்ந்த கேமரா குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. யூடுயூபில் எத்தனையோ சமையல் சேனல் இருந்தாலும் லுங்கி, தலப்பா கட்டிக்கொண்டு கிராமத்தில் உள்ள அழகான லொகேஷனில் சமைத்து, சமைத்து முடித்ததை தாங்கள் மட்டும் உண்ணாமல் அருகில் உள்ளவர்கள், ஆதாரவற்ற ஆசிரமங்களுக்கு பரிமாறி நம் மனதையும் நிறைய வைத்த சேனல் village cooking chennal.
இந்த சேனல் தமிழ் ரசிகர்கள் மனதில் நிரந்தர இடத்தை பிடித்து இருக்கிறது. இன்னிக்கி ஒரு புடி, always welcomes you என்ற வசனத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர்கள் இந்த village cooking டீம். தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி இந்த village cooking டீம் இளைஞர்களுடன் சேர்ந்து சமைத்துச் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளத்தில் படு வைரலாக பரவியது. அதோடு ஒரு தேசிய கட்சித் தலைவர் தமிழ் யூடுயூப் சேனலை விசிட் அடித்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
village cooking சேனல்:
இப்படி ராகுல் காந்தி வந்து சென்ற வரை 70 மில்லியன் சப்ஸ்ரைபர்கள் வந்து இருந்த நிலையில் 5 மாதத்தில் 30 மில்லியன் சப்ஸ்ரைபர்கள் உயர்ந்து 10 மில்லியன் சப்ஸ்ரைபர்களை பெற்று இருக்கிறது இந்த சேனல்.
10 மில்லியன் என்றால் 1 கோடி பேர் என்ற இமாலய பாலோவர்ஸ். தென்னிந்தியாவிலேயே 10 மில்லியன் பாலோவர்கள் பெற்ற முதல் சேனல் அதுவும் ஒரு தமிழ் முதல் சேனல் என்ற பெருமையை பெற்று இருக்கிறது இந்த டீம். தற்போது இந்த சேனல் 2.27 கோடி சப்ஸ்ரைபர்களை பெற்று வேற லெவலில் சென்று கொண்டு இருக்கிறது.
சேனல் நடந்தும் நபர்கள்:
இந்த இளைஞர்கள் லட்சக்கணக்கில் வருமானம் கிடைத்தாலும், எந்த வகையிலும் தங்களை மாற்றிக்கொள்ளாமல் எளிமையாக இருக்கின்றனர் . இந்த சேனலின் உரிமையாளர் எம்.காம், எம்.பில் படித்திருக்கிறார். இவர் தான் இந்த சேனலின் கேமரா மேன். படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்த இவர் பின்னர் தனது நண்பர்களை வைத்து துவங்கியது தான் இந்த சேனல். இவர்களுக்கு யூடுயூப் தரப்பில் இருந்து டைமண்ட் பட்டனும் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த சேனலை பிரபலங்கள் பலரும் பாராட்டி வாழ்த்தி இருந்தார்கள்.
லோகேஷ் சொன்ன விஷயம்:
கடந்த ஆண்டு லோகேஷ் இயக்கத்தில் வெளியாகி இருந்த விக்ரம் படத்தில் கூட ஒரு காட்சியில் வில்லேஜ் குக்கிங் டீம் இடம் பிடித்திருந்தார்கள். தற்போது வில்லேஜ் குக்கிங் சேனல் இந்திய அளவிலும் கவனம் பெற்று இருக்கிறது. இந்த நிலையில் லியோ படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்ட பேட்டியில் இணைய வாயிலாக வில்லேஜ் குக்கிங் டீம் வாழ்த்துக்களை தெரிவித்து தாங்கள் புதிதாக வாங்கிய RAPTORகேமராவை லோகேஷ் இடம் காட்டியிருக்கிறார்கள். இதை பார்த்தவுடன் லோகேஷ் கனகராஜ் ஆச்சரியப்பட்டு RAPTOR கேமரால சூட் பண்ற ஒரே யூடுயூபர் நீங்களா தான் இருப்பீர்கள்.
வில்லேஜ் குக்கிங் டீம் கேமரா:
பின் அவர், எனக்குத் தெரிந்து ரெட் ராஃப்டர் வகை கேமராவில் வீடியோ எடுக்கும் ஒரே youtuber நீங்கள் தான் இருக்கும் என்று கூறியிருந்தார். காரணம், உலக அளவில் பல கோடி பட்ஜெடிகளில் உருவாகும் படங்களை எல்லாம் இந்த ரெட் கேமராவில் தான் உருவாக்குகிறார்கள். தற்போது வில்லேஜ் குக்கிங் குழுவினர் வைத்திருக்கும் கேமராவின் விலை 34 லட்சம். இதனுடைய அடுத்த மாடல் ரெட் வி ராப்டர் எக்ஸ் எல் கேமரா தான். இதை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹன்ஸா வைத்திருக்கிறார். இதனுடைய மதிப்பு 300 கோடியாகும். இவர் லியோ படத்தின் ஒளிப்பதிவாளர். அவர் லியோ படத்திற்கு இந்த கேமராவை வைத்து தான் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.