எத்தனை மில்லயன் பாலோவர்களோ அத்தனை மில்லியனை கொரோனா நிதியாக அளித்த Village cooking chennal – குவியும் பாராட்டு.

0
898
- Advertisement -

யூடுயூபில் எத்தனையோ சமையல் சேனல் இருந்தாலும் லுங்கி, தலப்பா கட்க்கொண்டு கிராமத்தில் உள்ள அழகான லொகேஷனில் சமைத்து, சமைத்து முடித்ததை தாங்கள் மட்டும் உண்ணாமல் அருகில் உள்ள ஆதாரவற்ற ஆசிரமங்களுக்கு பரிமாறி நம் மனதையும் நிறைய வைத்த village cooking chennal தமிழ் ரசிகர்கள் மனதில் நிரந்தர இடத்தை பிடித்து இருக்கிறது. இன்னிக்கி ஒரு புடி, always welcomes you என்ற வசனத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர்கள், இந்த village cooking டீம். தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி கிராமத்து இளைஞர்களுடன் சேர்ந்து சமைத்துச் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளத்தில் படு வைரலாக பரவியது.

-விளம்பரம்-

ஒரு தேசிய கட்சித் தலைவர் தமிழ் யூடுயூப் சேனலை விசிட் அடித்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ராகுல் காந்தி வந்து சென்ற வரை 70 மில்லியன் பாலோவர்கள் இருந்த நிலையில் தற்போது 5 மாதத்தில் 30 மில்லியன் சப்ஸ்ரைபர்கள் உயர்ந்து 10 மில்லியன் சப்ஸ்ரைபர்களை பெற்று இருக்கிறது இந்த சேனல்.

இதையும் பாருங்க : ஹேராம் படத்தில் ஷாருக்கான் பெற்ற சம்பளம் எவ்வளவு ? கமல் சொன்ன ஷாக்கிங் தகவல். வீடியோ இதோ.

- Advertisement -

10 மில்லியன் என்றால் 1 கோடி பேர் என்ற இமாலய பாலோவர்ஸ். தென்னிந்தியாவிலேயே 10 மில்லியன் பாலோவர்கள் பெற்ற முதல் சேனல், அதுவும் ஒரு தமிழ் யூடுயூப் சேனல் என்ற பெருமையை பெற்று இருக்கிறது இந்த டீம். லட்சக்கணக்கில் வருமானம் கிடைத்தாலும், எந்த வகையிலும் தங்களை மாற்றிக்கொள்ளாமல் எளிமையாக இருக்கின்றனர் அந்த இளைஞர்கள்.

இந்த சேனலின் உரிமையாளரான  எம்.காம், எம்.பில் படித்திருக்கும் இந்த சேனலின் கேமரா மேன் தான். படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்த இவர் பின்னர் தனது நண்பர்களை வைத்து துவங்கியது தான் இந்த சேனல். சமீபத்தில் 10 மில்லியன் பாலோவர்களை பெற்ற காரணத்தால் இவர்களுக்கு யூடுயூப் தரப்பில் இருந்து டைமண்ட் பட்டனும் அனுப்பப்பட்டு உள்ளது.

-விளம்பரம்-

10 மில்லியன் பாலோவர்கள் பெற்ற மகிழ்ச்சியில் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து 10 லட்சம் ருபாய் கொரோனா நிவாரண நிதியாக வழங்க இருப்பதாக அறிவித்து இருந்தனர். அதாவது 10 மில்லியன் பாலோவர்களுக்கு சமமான 10 மில்லயன் பணத்தை முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சென்று குழுவாக சந்தித்து நிதியை அளித்துள்ளனர்.

இவர்களது வெற்றியை பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர். மேலும், பல்வேரு திரைதுறை பிரபலங்களும் 10 மில்லியன் பாலோவர்களை பெற்ற இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர்கள் மேலும் மேலும் பாலோவர்களை பெற்று மேலும் உயர வாழ்த்துவோம்.

Advertisement