ஹேராம் படத்தில் ஷாருக்கான் பெற்ற சம்பளம் எவ்வளவு ? கமல் சொன்ன ஷாக்கிங் தகவல். வீடியோ இதோ.

0
22389
heyram
- Advertisement -

பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஷாருக்கான். பாலிவுட்டில் எண்ணெற்ற திரைப்படங்களில் நடிக்கும் இவர் பல கோடி சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக திகழ்ந்து வருகிறார். ஆனால், இவர் கமல் நடித்த ‘ஹேராம்’ படத்தில் நடிக்க பெற்ற சம்பளம் குறித்து நடிகர் கமல் ஆச்சரியமான விஷயம் ஒன்றை சொல்லியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று அழைக்கப்படும் கமல் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர் இயக்குனர் என்று பன்முக திறமைகளை கொண்டவர்.

-விளம்பரம்-

மேலும், இவர் பல்வேரு படங்களையும் இயக்கி இருக்கிறார். அந்த வகையில் கமல் இயக்கத்தில் வெளியான படம் ‘ஹேராம்’. கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஷாரூக்கான், ஹேமமாலினி, ராணி முகர்ஜி, வசுந்த்ரா தாஸ், அதுல் குல்கர்னி உட்பட பலர் நடித்தனர். இளையராஜா இசையமைத்தார். காந்தியை சுட்டுக்கொன்ற சம்பவத்தின் பின்னணி என பரபரப்பை கிளப்பிய படம் இது.

இதையும் பாருங்க : ரெக்க படத்தில் பாவாடை தாவணியில் பார்த்த மாலாக்காவா இது – கடற்கறையில் நடத்திய போட்டோ ஷூட்.

- Advertisement -

சில சர்ச்சைகள் இருந்தாலும் படத்தை கமல் இயக்கிய விதம் இன்றளவும் பாராட்டப்பட்டு வருகிறது. கமல் எத்தனையோ படங்களை தயாரித்திருக்கிறார் அதில் சில வெற்றிப்படங்களும் இருக்கிறது சில தோல்வியும் அடைந்துள்ளது.மேலும் அவரது மருதனாயாகம் படம் கூட எவ்வளவோ பொருட்செலவில் உருவாகி பின்னர் கைவிடப்பட்டது இதனால் கமலுக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டது.அந்த படத்திற்கு பிறகு கமல் தனது நஷ்டத்தை எடுசெய்துகொள்ள பல்வேறு படங்களில் நடித்து வந்தார்.

மேலும், இந்த படத்தில் ஷாருகான் கோடி கணக்கில் சம்பளம் பெற்றார் என்றும் அப்போது கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தில் ஷாரூக்கான் சம்பளம் என்ன என்பதை கமல் பேசியுள்ள வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஷாருக்கான் ஒரு பிசினஸ்மேன் என்று பலரும் கூறுவார்கள் நானும் அப்படி தான் சொல்லுவேன். ஆனால், ஹேராம் படத்தில் பட்ஜெட் என்ன என்பது ஷாருக்கானுக்கு தெரியும். மேலும், அவர் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்பதை மட்டும்தான் நினைத்தார். அதேபோல இந்த படத்தின் ஹிந்தி உரிமையையும் அவர் வாங்கிக் கொண்டார். ஆனால், இந்த படத்துக்காக அவர் ஒரு ரூபாய் கூட சம்பளம் பெறவில்லை. மாறாக அவருக்கு நான் ஒரே ஒரு கைக்கடிகாரத்தை மட்டும் தான் பரிசாக அளித்து இருந்தேன் என்று கூறியுள்ளார் கமல்.

-விளம்பரம்-
Advertisement