சினிமாவில் மட்டும் தான் வில்லன். ஆனால், நிஜத்தில் ஹீரோ. இவர் செய்து வருவதை பாருங்க.

0
9716
raja-simman
- Advertisement -

சினிமாவைப் பொருத்தவரை படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர்களை நிஜ வாழ்க்கையிலும் ரசிகர்கள் வில்லனாகத்தான் பார்க்கின்றார்கள். எம் ஜி ஆர் சிவாஜி காலத்தில் வில்லன் நடிகராக இருந்த நம்பியார் மேடையில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவரை ஊர்மக்கள் மேடையில் இருந்து இறக்கிய சம்பவங்கள் கூட நடந்திருக்கிறது என்ற செவிவழிச் செய்தியும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், சினிமாவில் வில்லனாக நடிக்கும் நடிகர்கள் சினிமாவில் நடிக்கும் ஹீரோக்களை விட நிஜவாழ்வில் ஹீரோக்களாக இருந்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் பிரபல வில்லன் நடிகரான ராஜசிம்மனும் ஒருவர். தமிழ் சினிமாவில் பல்வேறு முக்கிய நடிகர்களின் படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார் ராஜ சிம்மன். தமிழில் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான ராஜா எங்க ராஜா என்ற படத்தில் வில்லனாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் ராஜசிம்மன். சிவந்த கண்கள் கடா மீசை முரட்டு பார்வை என்று தனது தோற்றத்தின் மூலம் தன்னை ஒரு கொடூரமான வில்லனாக இருக்கும் இவரை இவரது முகத்தை காட்டிய ரசிகர்கள் மிரண்டு போனார்கள். ராஜசிம்மன் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.

இதையும் பாருங்க : ஹய்யய்யோ பிகில் தென்றலா இப்படி ஒரு ஸ்லீவ்லஸ் உடையில். வியந்து போன ரசிகர்கள்.

- Advertisement -

இதுவரை தமிழில் என்னைஅறிந்தால், கொம்பன், நண்பேண்டா, கடம்பன் போன்ற பல படங்களில் வில்லன் நடிகராக நடித்திருக்கிறார். மேலும், விஷால் நடிப்பில் வெளியான மருது படத்தில் கூட வில்லனாக நடித்திருக்கிறார். அந்த படத்தில் இவரது நடிப்பு மிகவும் கவனிக்க பட்டிருந்தது. சினிமாவில் வில்லனாக இருக்கும் ராஜசிம்மன் நிஜவாழ்க்கையில் ஒரு ஹீரோவாக இருந்து வருகிறார்.

நடிகர் ராஜ சிம்மன் தனது சொந்த செலவில் தினமும் 100 பேருக்கு உணவளித்து வருகிறாராம். ஆனால், இவர் செய்யும் உதவி இதுவரை யாருக்கும் தெரியாமல் பார்த்து வருகிறாராம். கோடிகளில் சம்பாதிக்கும் பல்வேறு நடிகர் நடிகைகள் மத்தியில் சினிமாவில் குறைவான சம்பளம் வாங்கும் நடிகராக இருந்தாலும்,ஏழைகளின் பசியை போக்கி ரசிகர்கள் மனதில் நிறைவான இடத்தை பிடித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement