தூறல் நின்னு போச்சு படத்தில் வில்லனாக நடித்து பெயர் பெற்றவர் நடிகர் சூரியகாந்த். இவர் தஞ்சாவூர் மாவட்டம் பூண்டியை சேர்ந்தவர். சின்ன வயதில் சினிமாவின் மீது ஏற்பட்ட பிரியத்தின் காரணமாக தனது கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு சென்னை வந்துவிட்டர்.
சென்னை வந்து வாய்ப்பு தேடி அலைந்து காலத்தில் அதற்காக பல ஏமாற்று பேர்வழிகளிடம் பணம் கொடுத்து ஏமாந்து போனார் சூரியகாந்த். அதன் பின்னர் தனது சைக்கிளில் ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கி வாய்ப்பு தேடினார். அப்படி கிடைத்தது தான் வசந்தகாலம் என்ற படத்தில் கிடைத்த வாய்ப்பு.

அதன்பின்னர், அடிச்சுவடுகள் , தூறல் நின்னு போச்சு ஆகிய படங்களில் நல்ல கேரக்டர் கிடைத்தது. இந்த படங்களில் தான் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இதனை பார்த்து இவரை வில்லன் வேடத்தில் மட்டும் நடிக்க அறிவுரை கூறினார் பாக்யராஜ்.
ஆனால், அதன்பின்னர் வேறு வழியின்றி கிடைத்த வேடத்தில் எல்லாம் நடித்தார் சூரியகாந்த். ஆனாலும் பெரிதாக எந்த ஒரு வாய்ப்பும் இல்லாததால் தற்போது வரை அவருடைய அந்த ஓட்டை சைக்கிளில் ஒவ்வொரு பட கம்பெனியாக ஏறி இறங்கி வாய்ப்பு தேடி வருகிறார்.

Advertisement
Advertisement