தடையை மீறி கூத்தடித்த சூரி மற்றும் விமல். வைரலான புகைப்படத்தால் ஆப்படித்த காவல் துறையினர்.

0
1478
vimal
- Advertisement -

நடிகர்கள் சூரி, விமல் உள்ளிட்ட திரைப்பலங்கள் கொடைக்கானல் பேரிஜம் ஏரிப்பகுதியில் மீன்பிடித்தது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. பிரபல ஊடகத்தில் வந்த தகவலின்படி நடிகர் சூரி மற்றும் விமல் கடந்த ஜூலை 17 மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு சென்றுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. கொரோனா சமைப்பதில் ஒரு மாவட்டத்தில் இன்னொரு மாவட்டத்திற்கே செல்ல பல்வேறு கெடுபிடிகள் இருந்து வருகிறது.

-விளம்பரம்-
 ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கொடைக்கானல் வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இப்படி ஒரு நிலையில் சூரி மற்றும் விமல் நண்பர்களுடன் கொடைக்கானல் சென்றதோடு அங்கே இருக்கும் பேரிஜம் ஏரியில் நண்பர்களுடன் மீன் புடித்தும் உள்ளார்கள். அந்த புகைப்படங்கள் எல்லாம் நண்பர்கள் வட்டாரத்தின் மூலம் எப்படியோ வெளியாக, பெருமாள் மலையை சேர்ந்த மஹிந்திரன் என்பவர் தடையை மீறி எப்படி அவர்கள் கொடைக்கானல் வனப்பகுதிக்கு சென்றனர் என்று போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இதையும் பாருங்க : கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படியா ? ஹரிஜாவின் கோலத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.

- Advertisement -

மகேந்திரன் கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். விசாரணையில், நடிகர் சூரி மற்றும் விமல் இருவரும் கொடைக்கானல் வனப்பகுதிக்கு செல்ல வனத்துறையிடம் அனுமதி கேட்டுள்ளனர் ஆனால் அவர்கள் அனுமதி அளிக்க மறுத்து அவர்களை திரும்பி போக சொல்லி இருக்கிறார்கள் இருப்பினும் வனத்துறையினர் அனுமதி இல்லாமல் 11:15 மணிக்கு சூரி, விமல் மற்றும் அவர்களது நண்பர்களை வனப்பகுதியில் கண்டு உள்ள அதிகாரிகள் விமல் மற்றும் சூரி மற்றும் அவர்கள் உடன் இருந்த நண்பர்கள் ஆகியோர் அனைவருக்கும் தலா 2000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்கள்.

 இவைகள் பழைய புகைப்படங்களா அல்லது தடையை மீறி அவர்கள் வந்தார்களா என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா சமயத்தில் நடிகர் சூரி பல்வேறு விதமான விழிப்புணர்வு வீடீயோக்களை வெளியிட்டு வந்தார். அதே போல நடிகர் விமலும் சில உதவிகளை செய்து வந்தார். அதே போல கடந்த சில மதங்களுக்கு முன்னர் நடிகர் விமல் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டு கன்னட நடிகர் அபிஷேக் என்பவரை தாக்கி பெரும் சர்ச்சையில் சிக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement