பிசிசிஐ நிர்வாகம் மீது இருக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு இந்திய அணியில் இருந்து வீரர்களை நீக்கும் போது அது குறித்த சரியான தகவல்களை அவர்களுக்கு தெரிவிக்காமல் இருப்பது தான். சமீபத்தில் கூட ரிஷப் பண்ட் விவகாரத்திலும் இந்த சர்ச்சை நடந்தது. இதே போல் மற்ற வீரர்களிடம் கேப்டன் சரியாக பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. இந்நிலையில் கேப்டன், மற்ற வீரர்களிடம் சரியாக பேசுவது இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார் இந்திய அணியின் ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக்.
இந்தியா– நியூசிலாந்து இடையேயான நேற்றைய டி20 குறித்து cricbuzz தளத்தில் பேசும்போது தோனி குறித்த சில சம்பவங்களை சேவாக் கூறி உள்ளார். ஏற்கனவே சேவாக்கும், தோனிக்கும் ஆகாது என்ற ஒரு கருத்து சமூக வலைத்தளங்களில் இருந்து கொண்டு தான் உள்ளது. 2012 ஆம் ஆண்டு காமன்வெல்த் முத்தரப்பு தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த தொடரின்போது செய்தியாளர்களிடம் தோனி பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் டாப் ஆர்டரில் விளையாடும் சேவாக் ஸ்லோ பீல்டர். அதனால் அடுத்தடுத்த போட்டிகளில் அணியில் டாப் ஆர்டரில் வீரர்கள் சுழற்சி முறையில் இறக்கப்படுவார்கள் எனக் கூறியிருப்பார்.
அவரின் இந்த கருத்து அந்த சமயத்தில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து ஏழு வருடங்கள் கழித்து சேவாக் தற்போது பேசியுள்ளார். அதில் அவர் கூறியது, தோனி கேப்டனாக இருக்கும் போது மற்ற வீரர்கள் இடம் சரியாக பேசியது இல்லை. அவர் வீரர்களிடம் சரியாக கம்யூனிகேட் பண்ண தவறிவிட்டார். 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா முத்தரப்பு தொடரின் போது செய்தியாளர்கள் மத்தியில் தோனி நான் ஸ்லோ ஃபீல்டர் என்று கூறியிருந்தார். எனக்கு இது பற்றி எதுவும் தெரியவில்லை. மீடியாவில் செய்திகள் வந்த பின்னர் தான் எனக்கு இந்த விஷயமே தெரியும்.
இது தெரிந்தும் நான் அவரிடம் இது குறித்து எதுவும் கேட்கவில்லை. அதுமட்டுமில்லாமல் தோனி எங்களிடம் பேசினால் மட்டும் தான் நாங்கள் எந்த அளவிற்கு திறமையானவர்கள் என்று அவருக்கு தெரியும். டிரசிங் ரூம்மில் நடைபெறும் மீட்டிங்கில் கூட தோனி அவர்கள் எங்களிடம் இதைபற்றி எதுவும் பேசவில்லை. ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக தான் இந்த டாப் ஆர்டர் சுழற்சி முறை கொண்டுவரப்பட்டது. இதுதான் உண்மை. ஆனால், நான் ஸ்லோ பீல்டர் என்று சொல்லி கூறியது ஏற்றுக்கொள்ளத்தக்கது. கேப்டன் மற்ற வீரர்களுடன் பேசுவார் என்பது தற்போது கேள்விக்குறியாகிறது. விராட் கோலியும் அவ்வாறே செய்கிறாரா? இல்லையா? என்று எங்களுக்கு தெரியவில்லை.
தற்போது நாங்கள் அணியில் இல்லை. ஆனால், ஆசிய கோப்பை தொடரில் ரோகித் சர்மா கேப்டனாக இருந்த போது அவர் அனைத்து வீரர்களிடம் சகஜமாகப் பேசுவார். ரிஷப் பண்ட் ஐ தொடர்ந்து அணியில் எடுக்காமல் இருப்பது வருத்தமாக உள்ளது. அவரை அணியில் இருந்து எடுக்காமல் இருந்தால் எப்படி ரன்களை எடுத்து இருப்பார்? நீங்கள் சச்சின் டெண்டுல்கரை அணியில் எடுக்காமல் இருந்தால் அவரால் எப்படி ரன்கள் எடுத்து இருக்க முடியும்? என்ற கேள்வியுடன் தன்னுடைய பேட்டியை முடித்துக் கொண்டார்.