விருமாண்டி பட நடிகை அபிராமியா இது. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.

0
44481
abhirami

‘விருமாண்டி’ படம் நடிகை அபிராமி நினைவிருக்குங்களா, தற்போது நடிகை அபிராமி அவர்கள் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார். மேலும், இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் வியப்பில் அதிர்ந்து போய் உள்ளார்கள். ,1995 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான ‘கதபுருஷன்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை அபிராமி. இவருடைய இயற்பெயர் திவ்யா கோபி குமர். மேலும், இவர் 2001 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘வானவில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த முதல் படத்திலேயே இவருக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது என்று சொல்லலாம். இதனை தொடர்ந்து இவருக்கு சினிமா உலகில் பல பட வாய்ப்புகள் வந்தது.

abhirami

- Advertisement -

மேலும்,நடிகை அபிராமி அவர்கள் தமிழில் பல படங்களில் நடித்து உள்ளார். பின் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி படத்தில் நடிகை அபிராமி கதாநாயகியாக நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் மிகப் பெரிய அளவில் மக்களிடையே பேசப்பட்டார் என்றும் சொல்லலாம். மேலும்,நடிகை அபிராமி அவர்கள் தமிழில் வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம், விருமாண்டி ஆகிய பல படங்களில் நடித்து உள்ளார். அதற்கு பின்னர் சரியாக இவருக்கு பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் ஆசியா நெட் சேனலில் தொகுப்பாளராக இருந்து வந்தார்.

இதையும் பாருங்க : மகாலட்சுமிக்கு சீரியல் நடிகருடன் கள்ளத்தொடர்பு. கணவர் கொடுமை குறித்து புலம்பி தள்ளிய நடிகை.

இவர் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி கேரளாவில் புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரான பவனனின் பேரனான ராகுல் பவனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். மேலும்,இவர் திருமணத்திற்குப் பின்னும் மூன்று படங்களில் நடித்து உள்ளார். இவர் தமிழில் கடைசியாக நடித்திருக்கும் படம் 36 வயதினிலே படம் . ஆனால், அதற்கு பின்னர் இவர் கன்னடம், மலையாளம் படங்களில் மட்டும் தான் நடித்து வருகின்றார். எப்போதுமே சினிமா நடிகைகள் பட வாய்ப்புகள் இல்லை என்றால் தங்களுடைய அழகையும், உடலையும் பராமரிப்பதில் கவனம் செலுத்த மாட்டார்கள். ஆனால், நடிகை அபிராமி அவர்களுக்கு 40 வயதுக்கு மேலாகியும் தன்னுடைய உடல் குறித்தும்,அழகு குறித்தும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

-விளம்பரம்-
Abhirami

இந்நிலையில் இவர் மாடர்ன் உடையில் இருக்கும் சில புகைப் படங்களை இணையதளங்களில் வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் எல்லாம் ஆச்சிரியத்தில் வியந்து போய் உள்ளனர். மேலும், நடிகை அபிராமி அவர்கள் 40 வயதிலும் தன்னுடைய அழகிலும், உடலிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்று பாராட்டி உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் நடிகை அபிராமி அவர்கள் மாடர்ன் உடையில் மிக அழகாக இளமையாக உள்ளார் என்றும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இவர் பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார் என்ற தகவலும் வந்து உள்ளது.

Advertisement