மகாலட்சுமிக்கு சீரியல் நடிகருடன் கள்ளத்தொடர்பு. கணவர் கொடுமை குறித்து புலம்பி தள்ளிய நடிகை.

0
84305
Mahalakshmi
- Advertisement -

சன் குழும் ஆரம்பித்த சன் மியூசிக் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கிகள் அறிமுகமான கலகட்டடத்தில் இருந்து தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான மஹாலக்ஷ்மி. பப்லியான தோற்றம் கீச்சு கீச்சு குரல் என்று இவரது ஆங்கரிங் மூலம் ரசிகர்களை சுண்டி இழுத்தார். அரசி’ சீரியல்மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர், மகாலட்சுமி. எட்டு வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் முத்திரையைப் பதித்துவருபவர். இறுதியாக , சன் டிவியில் ‘தாமரை’ மற்றும் ‘வாணி ராணி’ சீரியலிலும், ஜீ தமிழ் சேனலில் ‘தேவதையைக் கண்டேன்’ சீரியலிலும் பரப்பாகநடித்து வந்தார் .

-விளம்பரம்-
ஈஸ்வர், ஜெயஸ்ரீ
ஈஸ்வர், ஜெயஸ்ரீ

- Advertisement -

மஹாலக்ஷ்மி 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் தான். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் மஹாலக்ஷ்மிக்கும் தனது கணவருக்கும் கள்ளத் தொடர்பு இருக்கிறது என்றும் இதனால் தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் சீரியல் நடிகை ஜெயஸ்ரீ போலீசில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தேவதையை கண்டேன் ‘ சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த தொடரில் ஹீரோவாக ஈஸ்வரும், வில்லியாக மஹாலக்ஷ்மியும் நடித்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : அட கொடுமையை vj ஸ்வர்ணமால்யாவா இப்படி ஒரு ஆடைகளில் எல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.

இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்து வருவதை அறிந்த ஜெயஸ்ரீ தனக்கு தெரிந்த போலீசில் புகார் அளித்து மஹலக்ஷ்மிக்கு எச்சரிக்கைவிடுத்துளளார். இதனால் ஜெயஸ்ரீக்கு அவரது கணவர் ஈஸ்வருக்கு பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் ஜெயஸ்ரீ விவாகரத்து கேட்டு கணவர் தன்னை அடித்து கொடுமைபடுத்துவதாக போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் ஈஸ்வரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து ஜெயஸ்ரீ தெரிவிக்கையில், எங்களுக்கு திருமணம் முடிந்து நான்கு வருடங்கள் ஆகி தற்போது ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. கல்யாணத்திற்கு பிறகுதான் அவருக்கு குடி பழக்கம் இருப்பது எனக்கு தெரியும்.

-விளம்பரம்-

vj mahalakshmi family
கணவர் மற்றும் குழந்தையுடன் மஹாலக்ஷ்மி

மேலும், கடன் வாங்கி சூதாடுவார். இதனால் லட்சக்கணக்கில் கடன் வைத்திருக்கிறார். அந்த கடனை எல்லாம் நான்தான் அடைத்தேன். தேவதையை கண்டேன் சீரியலில் நடிக்க துவங்கிய பின்னர் இவருக்கும் மகாலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் அவருடன் வாழ ஆசைப்பட்டு என்னிடம் விவாகரத்து கேட்டார். ஆனால், நான் மறுத்து விட்டேன். அதனால் என்னை கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். எனது பெண் முன்னாடியே மகாலட்சுமிக்கு வீடியோ கால் போட்டு கொஞ்சி கொஞ்சி பேசுவார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பையன் இருக்கிறான். அந்த பையனிடம் தன்னை ‘அப்பா’ன்னு கூப்பிட சொல்லுவார். இதனால் என்னுடைய பெண் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கிறார்.

ஜெயஸ்ரீ
ஜெயஸ்ரீ

குடித்துவிட்டு என்னை வயிற்றில் எட்டி உதைத்தார். அந்த வலி இன்னும் எனக்கு இருக்கிறது. மேலும், நடுவீட்டில் சிறுநீர் கழிப்பார். இந்த கொடுமையெல்லாம் பொறுக்கமுடியாமல் தற்போது போலீசில் புகார் கொடுத்திருக்கிறேன். அவரையும் அவரது அம்மாவையும் கைது செய்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும், இதுதொடர்பாக போலீசார் மகாலட்சுமியை விசாரணைக்கு அழைக்க முயற்சி செய்து வருவதாகவும் ஆனால், அவர் தலைமறைவாக இருந்து வருவதாகவும், அவரது மொபைல் எண்ணை கூட தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

Advertisement