‘மதகஜராஜா’ வெற்றி விழாவில் வரலட்சுமி குறித்து விஷால் பேசியிருக்கும் விஷயம் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சுந்தர்.சி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தான் மதகஜராஜா. இந்த படத்தில் விஷாலுடன் சந்தானம், சோனு சூட், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, மணிவண்ணன், மனோ பாலா, மயில்சாமி, சிட்டிபாபு உட்பட பலர் நடித்து இருந்தார்கள். ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் இந்த படம் 2013 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகுவதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனை ஏற்பட்டதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. சமீபத்தில் தான் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி மதகஜராஜா படம் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். 12 வருடம் கழித்து இந்த படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்தியது. சோசியல் மீடியாவிலும் இப்படம் குறித்து அதிகமாக பேசப்பட்டு வந்தது.
மதகஜராஜா படம்:
அந்த வகையில் பொங்கலை முன்னிட்டு இப்படம் கடந்த 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. மற்ற பொங்கல் ரிலீஸ் படங்களை காட்டிலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. அனைத்து தரப்பினரிடம் இருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த படம் நல்ல வசூல் வேட்டையும் செய்து வருகிறது. குறிப்பாக இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் இசையில் விஷால் பாடியுள்ள ‘மை டியர் லவ்வரு’ பாடல் மக்களிடையே பயங்கர வைப்பை ஏற்றிருக்கிறது.
மதகஜராஜா வெற்றி விழா:
அதனைத் தொடர்ந்து, சமீபத்தில் நடந்த இந்த படத்தில் வெற்றி விழாவில் விஷால், வரலட்சுமி உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது வரலட்சுமி குறித்து விஷால் நெகிழ்ச்சியுடன் சில விஷயங்களை பேசி இருந்தார். அதில், இத்தனை வருட அன்பான தோழி வரலட்சுமி, ஏதோ பிரிட்ஜில் வைத்தது போல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கிறார். ஒரே ஒரு படம் தான் பண்ணி இருந்தாலும் கூட ஏதோ கல்லூரியில் படித்து நண்பர்களாக இருப்பது போல நாங்கள் பழகுவோம். நான் பல பிரச்சனைகளை, தடைகளை சந்தித்து இருக்கிறேன்.
வரலட்சுமி குறித்து விஷால்:
ஆனால், எப்போதும் எனக்கு அழும் பழக்கம் கிடையாது. கண்ணாடியின் முன் நின்று பேசுவேன். எதையும் தாண்டி சென்று விடலாம் என எனக்கு நானே பேசி தைரியம் சொல்லிக் கொள்வேன். ஆனால், நான் முதன் முறையாக கண்கலங்கியது ‘ஹனுமன்’ படத்தில் வரலட்சுமி நடித்த ஒரு காட்சியை பார்த்து தான். அந்த காட்சிக்கு திரையரங்கில் ரசிகர்களிடம் கிடைத்த கைத்தட்டலை பார்த்து நான் கண்கலங்கினேன் என்று பேசியிருந்தார். இதற்கிடையே தமிழ் திரையுலகில் அதிகம் கிசுகிசுக்கப்பட்ட ஜோடிகளில் ஒன்றுதான் விஷால் மற்றும் வரலட்சுமி ஜோடி.
கிசுகிசுக்கப்பட்ட ஜோடி:
12 வருடங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் ‘மதகஜராஜா’ என்கிற திரைப்படத்தில் தான் இணைந்து நடித்தார்கள். ஆனால், அந்தப் படத்தில் நடித்த பிறகு தான் இவர்களது நட்பு நெருக்கமாகி பல நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாகவே வந்து சென்று காதல் கிசுகிசுக்களில் சிக்கினார்கள். இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று கூட செய்திகள் வந்தன. ஆனால், அதன் பிறகு விஷால் ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக கூறப்பட்ட நிலையில் அந்த திருமணமும் நின்றுவிட்டது. சமீபத்தில் தான் வரலட்சுமி, தனது நீண்ட நாள் நண்பரான நிக்கோல்ஸ் சக்தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது