விஷால் – அனிஷா திருமண அறிவிப்பு.! இந்த தேதியில், இங்கு தான் நிச்சயதார்த்தம்.!

0
636
- Advertisement -

தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் நடிகராகவும் விளங்கி வருகிறார் நடிகர் விஷால். தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் விஷால், தயாரிப்பாளர்கள் சங்கக் கட்டிடம் கட்டிய பின்னர் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அறிவித்திருந்தார்.

-விளம்பரம்-
Vishal-wife

இந்த நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்னர் அனிஷா அல்லா என்பரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார் விஷால். பிரபல தொழிலதிபரின் மகளும் நடிகையுமான
அனிஷா அல்லா தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையும் படியுங்க : முதலில் காதலை சொன்னது யார்.!காதல் ஸ்டோரி கூறும் விஷால்.! 

- Advertisement -

அயோக்கியா திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற்ற போது அனிஷா அல்லாவை சந்தித்த போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. தற்போது இவர்கள் இருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற இருக்கிறது.

இவர்களது திருமணம் வருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் வருகிற 16-ந்தேதி (சனிக்கிழமை) ஐதராபாத்தில் நடைபெற இருக்கிறது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement