இரண்டாவது முறையாக பார்ட் 2-வில் நடிக்கும் விஷால்.! இதாவது ஹிட் ஆகுமா.!

0
619
- Advertisement -

விஷால் நடிப்பில் நேற்று (மே 10) அயோக்கியா படம் வெளியாவதாக இருந்தது. ஆனால், சில பல பிரச்சனைகளால் அப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில் விஷால் நடிக்கவிற்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘துப்பறிவாளன்’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் விஷால், பிரசன்னா, வினய் என்று மல்டி ஸ்டார்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் விஷால் ஓரு வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையும் படியுங்க : தனது காதலை பற்றி முதன் முறையாக மனம் திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ் .! ரசிகர்கள் ஷாக்.! 

- Advertisement -

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் மிஸ்கின் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஷால் ஏற்கனவே ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் முதல் பாகத்திற்கு மாறாக படு தோல்வி அடைந்தது.

Related image

அதே போல துப்பறியாளன் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் தான். எனவே, இந்த படத்தின் இரண்டாம் பாகமாவது வெற்றியடையுமா என்பதை பொறுத்திருந்து காணலாம். மேலும், மிஸ்கின் எடுக்கும் முதல் இரண்டாம் பாக திரைப்படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement