சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட ‘ நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக விளங்கி வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான “நீதானா அவன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பின்னர் பல படங்களில் நடித்திருந்தலும் “பண்ணையாரும் பத்மினியும், காகா முட்டை” போன்ற படங்கள் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது.
இதையும் படியுங்க : வல்லவன் படத்தில் பள்ளி மாணவியாக வந்துள்ள வைஷ்ணவி.! அவருக்கே தெரியாதாம்.!
தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் தமிழ் மற்றும் தெலுகு சினிமா பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரபல இளம் நடிகருடன் காதல் கொண்டுள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
இதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் தனது ட்விட்டரில் ‘எனது காதலை பற்றி தவறான செய்திகள் பரவி வருகிறது. நானும் அவர் யார் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். இது போன்ற செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள். நான் காதலித்தால் அதை நானே முதலில் தெரிவிப்பேன்’ என்று பதிவித்துள்ளார்.