அவன் அந்த பொண்ண சின்சியராதா லவ் பண்ணான், ஆனா அந்த பொண்ணு இப்படி பண்ணிடிச்சி – கலங்கிய விஷால் தந்தை

0
28645
vishal
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராகவும், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஷால். சினிமா தயாரிப்பாளர் ஜிகே ரெட்டி அவர்களின் மகன் தான் விஷால். நடிகர் விஷால் அவர்கள் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த செல்லமே என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். விஷால் நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

-விளம்பரம்-
Tamil actor Vishal's marriage date fixed - The Week

இதனிடையே சமீப காலமாகவே ரசிகர்கள் அனைவரும் விஷாலுக்கு எப்போ கல்யாணம்? என்று சோசியல் மீடியாவில் கேட்டு வந்திருந்த நிலையில் தற்போது விஷாலின் தந்தை இதுகுறித்து பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நான் தான் விஷாலை கட்டாயப்படுத்தி சினிமா துறையில் நடிக்க வைத்தேன். அதே மாதிரி அவருடைய திருமணத்தையும் என்னால் கட்டாயப்படுத்த முடியாது. விஷால் ஏற்கனவே என்னிடம் தயவு செய்து என்னை திருமணத்திற்கு கட்டாயப்படுத்தாதீர்கள் என்று சொல்லிவிட்டார்.

இதையும் பாருங்க : பச்சோந்தி, விஷக்கிருமி, நெகட்டிவ்ட்டி – சர்வைவர் போட்டியாளர்களுக்கு பட்டம் அளித்த இந்திரஜா.

- Advertisement -

எனக்கு கல்யாணம் பண்ணலாம் என்று தோணும் போது நான் செய்து கொள்கிறேன் அப்பா என்னை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அதனால் நாங்களும் விஷாலை கட்டாயப்படுத்த வில்லை. ஏனென்றால் சினிமா துறைக்கு என்னுடைய கட்டாயத்தினால் தான் அவர் நடிகர் ஆனார். அதனால் கல்யாணத்தையும் கட்டாயப்படுத்தி செய்து வைத்து பின்னாடி ஏதாவது பிரச்சனை என்றால் நீங்கள் தான் காரணம் என்று என்னை சொல்லுவார். அதேபோல் விஷால் ஒரு பொண்ணை காதலித்தது உண்மை தான். அந்தப் பெண் வேறொருவரை திருமணம் செய்துவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டார்.

வீடியோவில் 11 : 46 நிமிடத்தில் பார்க்கவும்

அது கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது. அது எல்லாம் காலப்போக்கில் மறைந்து விட்டது. சோசியல் மீடியாவில் பலவிதமாக பேசுவார்கள் அதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போது விஷால் நடிகர் சங்கத்துக்கு நல்ல தலைவனாக இருக்கிறான். 52 வருடமாக செய்த முடியாத விஷயத்தை விஷால் செய்வதால் உண்மையிலேயே அவன் சிறந்த தலைவன். அதனால் விஷால் எடுக்கும் முடிவு நல்லதாக தான் இருக்கும் என்று கூறினார். இப்படி இவர் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement