குழந்தை நட்சத்திரமாக விஷால் அறிமுகமான முதல் படம் – அதுவும் பாண்டியராஜன் படத்தில்.

0
1649
vishal

தமிழில் சினிமா உலகில் மிக பிரபலமானவரும், முன்னணி நடிகரும் ஆனவர் விஷால். அதோடு சினிமா உலகில் இவர் புரட்சி தளபதி என்று பட்டப் பெயரை எடுத்தவர். நடிகர் விஷால் அவர்கள் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் ஆவார். இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் செயலாளராகவும், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார். மேலும், தமிழ் சினிமாவில் மாற்றங்கள் பல கொண்டு வர வேண்டும் என்பதற்காக நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் என இரண்டு சங்கங்களிலும் முக்கிய பொருப்புகளை வகித்து வருபவர் விஷால். தற்போது வரை நடிகர் விஷால் அவர்கள் 29 படங்களில் நடித்து உள்ளார்.

Vishal

இந்நிலையில் நடிகர் விஷால் நடித்த முதல் படம் எது என தெரியுமா? அனைவருக்கும் இவருடைய முதல் திரைப்படம் செல்லமே என்று தான் நினைத்து உள்ளார்கள். ஆனால், அது தவறு. அதற்கு முன்னரே 1989ல் நடிகர் பாண்டியராஜன் நடிப்பில் வெளி வந்த ‘ஜாடிக்கேத்த மூடி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஷால் அவர்கள் நடித்து உள்ளார். இந்த படத்தில் தயாரிப்பாளர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தான். இந்த படத்தில் ஒரு பாடலில் பாண்டிய ராஜனுடன் சில நொடிகள் மட்டும் நடிகர் விஷால் நடனம் ஆடி உள்ளார். குட்டி விசால் இந்த படத்தில் ஆடும் போது அவருக்கு வயது 6. அதற்கு பிறகு தான் இவர் செல்லமே என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

- Advertisement -

பின் நடிகர் விஷால் அவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். ஆம்பள படத்தை தொடர்ந்து சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்து உள்ள படம் ‘ஆக்ஷன்’. மேலும், இயக்குனர் சுந்தர்.சி இயக்கிய ‘ஆக்ஷன்’ படம் கடந்த ஆண்டு தான் வெளியானது. இந்த ஆக்ஷன் படம் முழுவதும் அதிரடி, ஆக்ஷன் தான். நடிகர் விஷால் மற்றும் தமன்னா நடிப்பில் உருவாகி வரும் படம் தான் ‘ஆக்ஷன்’. மேலும், இந்த படத்தில் அகன்ஷா பூரி, சாயாசிங், ஐஸ்வர்யா லட்சுமி, ராம்கி, கபீர் சிங்,யோகி பாபு, ஷா ரா, ஜார்ஜ் மரியான், ஆனந்தராஜ் உள்பட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். மேலும், ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்கள் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

This image has an empty alt attribute; its file name is image-38.png

இதனை தொடர்ந்து இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘துப்பறிவாளன்’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் விஷால், பிரசன்னா, வினய் என்று மல்டி ஸ்டார்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் விஷால் ஓரு வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் மிஸ்கின் எடுக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதோடு நடிகர் விஷால் அவர்கள் ஏற்கனவே ‘சண்டக்கோழி 2’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement