ஊருக்கே கல்யாணம் பண்ணி வக்கறீங்க. ஆனா உங்களுக்கு கல்யாணம் ஆகாதது மனசுக்கு கஷ்டமா இருக்கு – உருகிய பாட்டி

0
445
Vishal
- Advertisement -

தமிழில் சினிமாவில் புரட்சி தளபதி என்று பட்டப்பெயரை எடுத்தவர் நடிகர் விஷால். பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகனான இவர் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார்.விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் 16-ந்தேதி சனிக்கிழமை, ஐதராபாத்தில் உள்ள ஐடிசி கோஹினுரில் நடைபெற்றது. மேலும், இவர்களது திருமணம் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-

ஆனால், தற்போது வரை இவர்கள் திருமணம் நடைவில்லை பெறவில்லை. இப்படி ஒரு நிலையில் விஷாலின் வருங்கால மனைவி அனிஷா, விஷலுடன் இருந்த புகைப்படத்தையும், நிச்சயதார்த்தத்தின் போது எடுத்த அணைத்து புகைப்படத்தையும் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்துநீக்கியும் இருந்தார். .இதனால் விஷால் – அனிஷா திருமணம் நின்றுவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து பேசிய விஷாலின் தந்தை ”விஷால் ஏற்கனவே என்னிடம் தயவு செய்து என்னை திருமணத்திற்கு கட்டாயப்படுத்தாதீர்கள் என்று சொல்லிவிட்டார்.

- Advertisement -

தந்தை சொன்ன விஷயம் :

எனக்கு கல்யாணம் பண்ணலாம் என்று தோணும் போது நான் செய்து கொள்கிறேன் அப்பா என்னை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அதனால் நாங்களும் விஷாலை கட்டாயப்படுத்த வில்லை. ஏனென்றால் சினிமா துறைக்கு என்னுடைய கட்டாயத்தினால் தான் அவர் நடிகர் ஆனார். அதனால் கல்யாணத்தையும் கட்டாயப்படுத்தி செய்து வைத்து பின்னாடி ஏதாவது பிரச்சனை என்றால் நீங்கள் தான் காரணம் என்று என்னை சொல்லுவார். அதேபோல் விஷால் ஒரு பொண்ணை காதலித்தது உண்மை தான். அந்தப் பெண் வேறொருவரை திருமணம் செய்துவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டார்.

விட்டு போன காதலி :

அது கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது. அது எல்லாம் காலப்போக்கில் மறைந்து விட்டது. சோசியல் மீடியாவில் பலவிதமாக பேசுவார்கள் அதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போது விஷால் நடிகர் சங்கத்துக்கு நல்ல தலைவனாக இருக்கிறான். 52 வருடமாக செய்த முடியாத விஷயத்தை விஷால் செய்வதால் உண்மையிலேயே அவன் சிறந்த தலைவன். அதனால் விஷால் எடுக்கும் முடிவு நல்லதாக தான் இருக்கும் என்று கூறினார்.

-விளம்பரம்-

விஷால் நடத்தி வைத்த திருமணம் :

சென்னை மாத்தூரில் திருவள்ளூர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் இன்று 11 ஏழை ஜோடிகளுக்கு திருமண நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் நடிகர் விஷால் கலந்து கொண்டு 3 மத முறையிலும் வழிபட்டு ஒவ்வொரு ஜோடிகளுக்கும் தாலி எடுத்து கொடுத்து இலவச திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் 51 பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை விஷால் மணமக்களுக்கு வழங்கினார். இந்த நிலையில் இந்த விழாவில் பங்கேற்ற பாட்டி ஒருவர் ‘ஊருக்கே கல்யாணம் பண்ணி வக்கறீங்க. ஆனா உங்களுக்கு கல்யாணம் ஆகாதது மனசுக்கு கஷ்டமா இருக்கு’ என்று பேசி இருந்தார்.

பார்த்து வருத்தப்பட்ட பெண்மணி

இதற்கு விஷால் எந்த ரொம்ப நன்றி மா என்று சிரித்த முகத்துடன் கூறினார். கடந்த சில மாதங்களுக்கு முன்னாடி பேட்டி ஒன்றில் பேசிய விஷாலிடம் திருமணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் ‘அப்பா, அம்மா செஞ்சு வைக்கிற கல்யாணத்துல நான் செட் ஆவேனான்னு தெரியல. உங்க கிட்ட ஏன் பொய் சொல்லணும். எஸ்… லவ் பண்றேன். அந்தப் பொண்ணு யாருங்கிற கேள்விக்குக் கொஞ்சம் பொறுத்து பதில் சொல்றேன்’ என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement