மூன்றாவது முறையாக விஷால்- ஹரி கூட்டணியில் உருவாகும் படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் ஆவார். இவர் சினிமாவில் நடிகர் ஆவதற்கு முன்பே நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து இருந்தார். அதன் பின் இவர் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் செல்லமே.
அதன் பின் நடிகர் விஷால் அவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார். சமீபத்தில் வெளிவந்த நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் அணி தான் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறது. அதோடு தமிழ் சினிமாவில் புரட்சி தளபதி என்று நடிகர் விஷாலை அழைக்கிறார்கள். இருந்தாலும், விஷால் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
விஷால் திரைப்பயணம்:
அந்த வகையில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லத்தி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதை தொடர்ந்து தற்போது நடிகர் விஷால் அவர்கள் “மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார். இப்படத்தை எஸ்.வினோத் குமார் தயாரித்து இருக்கிறார். ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
மார்க் ஆண்டனி படம்:
மேலும் இப்படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடிக்கிறார். இவர்களுடன் இந்த பட்டத்தில் எஸ் ஜே சூர்யா, செல்வராகவன் நடித்து வருகின்றனர்கள். மேலும் சமீபத்தில் தான் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் எல்லாம் வெளியாகி இருந்தது. தற்போது இந்த படத்தினுடைய ரிலீசுக்கான வேலையில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும், விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படம் வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.
விஷால்- ஹரி கூட்டணி:
இந்த நிலையில் விஷால்- ஹரி கூட்டணியில் உருவாகும் படம் குறித்த அப்டேட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது விஷால் நடிக்கும் 34 வது படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார். இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் சவுத் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றது.
படம் குறித்த தகவல்:
மேலும், இந்த படம் வித்தியாசமான போலீஸ் கதை என்று கூறப்படுகிறது. இந்த படத்தினுடைய படப்பிடிப்பு இந்த மாதமே தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஹரி- விஷால் கூட்டணியில் தாமிரபரணி, பூஜை படங்கள் வெளியாகி இருந்தது. இந்த இரண்டு படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் வசூலையும் பெற்று தந்திருந்தது. இதனை அடுத்து மூன்றாவது முறையாக விஷால்- ஹரி கூட்டணி இணைந்து இருக்கிறது. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.