ஆர்.கே.நகர் தேர்தல் ! விஷால் கேட்ட சின்னம் இது தான்

0
2406

மறைந்த முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே நகருக்கு அவர் இறந்து ஒரு வருடம் கழித்து தான் இடைத்தேர்தல் நடக்கிறது. மேலும் இந்த தேர்தலில் பல புதிய பிரபலங்கள் சுயேச்சை வேட்பாளர்களாக களம் இறங்குகின்றனர்.
அதில், தென்னிந்திய நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷாலும் ஒருவர். திடீரென நானும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுகிறேன் என களத்தில் இறங்கிவிட்டார் விஷால். அங்கு வெற்றி வுற்று மக்களுக்கு நல்லது செய்யவுள்ளதாகவும் கூறுகிறார் விஷால்.

இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடுவதர்காக இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தாய் விஷால். மேலும், தேர்தல் ஆணையத்திடம் தனக்கு ‘விசில்’ சின்னம் வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

விஷால் தேர்தலில் போட்டியிடுவதை ஆந்திராவில் பல ஊடங்கள் கொண்டாடி வருகின்றன. ரஜினி கமல், விஜய் எல்லாம் யோசித்து வரும் நிலையில் ஹீரோ விஷால் தைரியமாக அரசியலில் இறங்கிவிட்டார் என ஆந்திர ஊடகங்கள் அவரை கொண்டாடி வருகின்றன.