இன்று மதியம் முதல் திடீரென களேபரமான ஆர்.கே நகர் தொகுதியில் தற்போது நிலைமை ஓரளவிற்கு சீரடைந்துள்ளது. இந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்த நடிகர் விஷாலின் வேட்புமனு சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. மேலும், நிராகரித்த செய்தி தெரிந்த விஷால் மற்றும் அவ்ரது ஆதரவாளர்கள் இது நியமான முறையில்லை என தேர்தல் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்யத் துவங்கினர்.

Advertisement

மேலும், இன்று மாலை வரை இந்த தர்ணா நீடித்ததால், போலீஸ் வீஷால் மற்றும் அவரது சகாக்களை கைது செய்தது. அவரது வேட்புமனு நிராகிரிக்கப்பட அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தான் காரணம் தான் ஒரு வீடியோ ஆதாரத்தை வெளியிட்டார் விஷால்.

Advertisement

இதனால், தன்னை முன்மொழிந்தவர்களில் இருவர் மிரட்டபட்டதாகவும் குற்றம் சாட்டினார். இதனை காரணமாக சற்று முன்னர் இதனை பரீசிலித்த தேர்தல் ஆணையம், விஷாலின் வேட்புமனுவை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தது.

Advertisement

இதனால், தற்போது நடிகர் விஷால் தேர்தல் ஆணையம் ஜனநாயக முறையில் தன்னை போட்டியிட ஏற்றுக்கொண்டதாக நன்றி தெரிவித்தார். மேலும், ஜனநாயக முறையில் இந்த தேர்தலில் போட்டியிடபோவதாகவும் பேட்டியளித்துள்ளார் விஷால்.

Advertisement