விஜய் பத்தி சொல்லனும்னா..! ஆனால் அஜித் …? முதன் முறையாக பேசிய விஷால் .!

0
2146
- Advertisement -

தமிழ் சினிமாவில் ரஜினி கமல் இவர்களுக்கு பிறகு விஜய் அஜித் என்பது தான் தொன்றுதொட்டே வழக்கமாக இருக்கிறது. மேலும் எந்த நடிகர் நடிகைகள் பேட்டி கொடுத்தலும் இந்த இரு நபர்களை பற்றி கேள்வி இல்லாத பேட்டிகளை நம்மால் பெரும்பாலும் காண முடியாது. இந்நிலையில் இவர்கள் இருவரையும் பற்றி நடிகர் விஷால் தனது சொந்த அபிப்பராயத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

- Advertisement -

தமிழ் சினிமாவில் விஜய்க்கு பிறகு தளபதி என்ற பட்டம் பெற்றவர் புரட்சி தளபதி விஷால் தான். தற்போது நடிகர் சங்க தலைவராக இருந்து வரும் இவர் அந்த பதிவுக்கு வந்ததிலிருந்து பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். இருப்பினும் யாருக்கும் பயப்பிடாமல் தனது பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார் விஷால்.

சமீபத்தியத்தில் ஒரு வர இதழ் பத்திரிகை ஒன்றில் பேட்டியளித்த விசாலிடம் தல மற்றும் தளபதியை பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளது இதற்கு பதிலளித்த விஷால் ” நடிகர் அஜித்தை அவ்வளவு எளிதில் தொடர்பு கொள்ள முடியாது , அவர் எப்போதும் தொடர்புகொள்ள முடியாத இடத்தில தான் இருப்பார் , இதனால் அவரிடம் எந்த ஒரு விசயத்திற்காகவாக இருந்தாலும் அவரை தொடர்புகொள்ளவே முடியாது , இந்த விஷயத்தில் அஜித்தை தமக்கு சுத்தமாக பிடிக்காது ” என்று கூறியுள்ளார்

-விளம்பரம்-

vijay-ajith

மேலும் விஜய் பற்றி பேசிய விஷால் ” விஜய் எனக்கு மிகவும் பிடித்த நபர் ,அவரை பற்றி பேச வேண்டும் என்றால் நான் பேசிகொண்டே இருப்பேன் , அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையை உள்ளது , மேலும் அவரின் கடின உழைப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் ” என்று பேசியுள்ளார். இதனால் அஜித் பற்றி சற்று மோசமாக பேசிவிட்டு விஜய் பற்றி மட்டும் பெருமையாக பேசிய விஷால் மீது அஜித் ரசிகர்கள் மிகுந்த கோவத்தில் இருக்கின்றனர் .

Advertisement