என்னைத் தேர்தலில் நிற்கவிடாமல் தடுத்தது இவர் தான் ! விஷால் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

0
448

கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் `இரும்புத்திரை’ பட சக்ஸஸ்மீட் சென்னையில் நடந்தது. விஷால், அர்ஜுன், இயக்குநர் மித்ரன், காஸ்டியூம் டிசைனர் ஜெயலட்சுமி மற்றும் சத்யா, எடிட்டர் ரூபன், வசனகர்த்தா பொன்.பார்த்திபன், கலை இயக்குநர் உமேஷ், கிராஃபிக்ஸ் டிசைனர் சிவக்குமார், நடிகர் காளி வெங்கட், எழுத்தாளர் ஆண்டனி பாக்கியராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர். `இரும்புத்திரை’ படம் குறித்து மட்டுமல்லாமல், தற்போது நடந்துகொண்டிருக்கும் பல்வேறு சினிமா பிரச்னைகளுக்கும் விஷால் பதிலளித்தார்.

irumbuthirai movie

`இரும்புத்திரை 2′ படத்துக்காக நான் ஆர்வமா காத்துக்கிட்டு இருக்கேன். நான் கட்சி கட்சினு போயிட்டா, `படத்தை முடிக்க முடியாது’னு ஆர்.கே.நகர் தேர்தல்ல மித்ரன் என்னை நிற்கவிடலை.

கிட்டத்தட்ட ஏழு வருடம் கழிச்சு அந்த இயக்குநர், `இரும்புத்திரை’ மூலமா தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியிருக்கார். அந்த ஒளிப்பதிவாளர் ஜார்ஜ், அந்த எடிட்டர் நான்தான். இந்தக் கதை வேற யார் கைக்குப் போயிருந்தாலும், இரும்புத்திரை `ஈயத்திரை’யாகவோ `பிளாஸ்டிக் திரை’யாகவோ மாறியிருக்கும்!” என்றார்.

irumbuthirai movie

மேலும் பத்திரிகையாளர்கள் கேட்ட, லைகா, நடிகர்கள் சங்கக் கட்டடம், விஷால் திருமணம் குறித்து கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். “சங்கக் கட்டடம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்படும். அதற்கடுத்துதான் கல்யாணத்தைப் பற்றி யோசிக்கணும். தமிழ் ராக்கர்ஸ், லைகா நிறுவனத்துடையதுனு சொல்றதுக்கு எந்தவொரு ஆதாரமும் நம்மகிட்ட இல்ல. அதனால அதைப் பற்றி எதுவும் பேச வேண்டாம்!” என்று முடித்தார் விஷால்.