தற்போது நடிகர் விஷால் அவர்கள் “மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவனது செப்டம்பர் 9 அன்று ஈக்காட்டுதாங்கலிலுள்ள முனீஸ்வரன் கோவில் அருகில் நடைபெற்றது.இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார். இப்படத்தை எஸ்.வினோத் குமார் தயாரித்து இருக்கிறார். ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடிக்கிறார். இவ்விழாவில் நடிகர் விஷால், நடிகர் எஸ்.ஜே.சூர்யா,நடிகர் ராஜ் கிரண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் பேசிய நடிகர் விஷால், ஈக்காட்டுதாங்கல் முனீஸ்வரன் கோவில் ஆக்கிரமிப்பு பிரச்னைக் குறித்து பேசினார்.

ட்ரெய்லர் வீடியோ:

இவர்களுடன் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, செல்வராகவன் நடித்து இருக்கிறார்கள். தற்போது இந்த படத்தினுடைய ரிலீசுக்கான வேலையில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் இந்த படத்தினுடைய இன்று ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. இந்த ட்ரெய்லர் 2 நிமிடம் 50 வினாடிகள் ஓடி இருக்கிறது. டைம் டிராவல், ஆக்சன், திரில்லர், கேங்ஸ்டர் போன்ற பலவித ஜர்னலில் இந்த படத்தை எடுத்திருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Advertisement

இந்த நிகழ்ச்சிக்கு வரும் போது தான் என்னிடம் கூறினார்கள் இந்த கோவில் கட்டி 63 வருடங்கள் ஆகிறது என்றும் தற்போது தான் PWD வந்து இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கின்றார்கள். இங்கு எதோ பலகை ஒன்றை மாற்றி இந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்றும் என்னிடம் சொன்னார்கள். இது பிரச்சனை கிடையாது அனைத்து பிரச்சினைகளுக்கும் கட்டாயம் ஒரு தீர்வு கிடைக்கும். ஆக்கிரமித்த நிலத்தை மீட்பது என்பது எனக்கு புதிதான‌ விஷயம் கிடையாது.

இதை நான் நடிகர் சங்கத்திலிருந்து தொடங்கி இருக்கின்றேன். ஏதோ ஒரு பலகை வைத்து இருப்பதாக சொன்னார்கள். நான் வெறும் சொல்லி விட்டுப் போகின்ற மனுஷன் கிடையாது. அந்தப் பலகையை வைக்கட்டும் அந்த சிலையை உடைக்க வந்தால் அதில் முதலாக நான் உங்களுக்காக இருப்பேன். எங்க 63 ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து கோவில் அழகுப்படுத்தி இருக்கிறார்கள் அது அவர்கள் குடும்பத்தை அழகுபடுத்திருக்கலாம் இருப்பினும் அவர்கள் கோவிலை அழகுபடுத்திருக்கின்றார்கள்.

Advertisement

இந்த சிலையை உடைப்பதற்கு ஒரு கலெக்டர் ஏதோ ஒரு கீரின் பேனாவால் எழுத்து மட்டும் தான் போடுவார் ஆனால் நமக்கு உணர்வாக இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் அதற்கு ஓட்டு போட்டுள்ளோம். சும்மாவா ஓட்டு போட்டும் நமக்கு எல்லாம் நன்மை நடக்கும் என்று தானே ஓட்டு போட்டோம். எல்லாரையும் சேர்த்து அய்யனார் சாமி நம்ம அனைவரையும் வாழ்த்துகிறார். கண்டிப்பாக உங்களுக்கு நல்லது நடக்கும் நல்லது நடக்கும் வரை நான் உங்களிடமிருந்து எங்கும் சென்று விடமாட்டேன். என்றும் அவர் கூறினார்.

Advertisement
Advertisement