தமிழில் சினிமா உலகில் மிக பிரபலமானவரும், முன்னணி நடிகரும் ஆனவர் விஷால். அதோடு சினிமா உலகில் இவர் புரட்சி தளபதி என்று பட்டப் பெயரை எடுத்தவர். நடிகர் விஷால் அவர்கள் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் ஆவார். இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் செயலாளராகவும், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார். மேலும், தமிழ் சினிமாவில் மாற்றங்கள் பல கொண்டு வர வேண்டும் என்பதற்காக நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் என இரண்டு சங்கங்களிலும் முக்கிய பொருப்புகளை வகித்து வந்தவர் விஷால்.
தற்போது வரை நடிகர் விஷால் அவர்கள் 29 படங்களில் நடித்து உள்ளார். அனைவருக்கும் இவருடைய முதல் திரைப்படம் செல்லமே என்று தான் நினைத்து உள்ளார்கள். ஆனால், அது தவறு. அதற்கு முன்னரே 1989ல் நடிகர் பாண்டியராஜன் நடிப்பில் வெளி வந்த ‘ஜாடிக்கேத்த மூடி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஷால் அவர்கள் நடித்து உள்ளார். இந்த படத்தில் தயாரிப்பாளர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தான். இந்த படத்தில் ஒரு பாடலில் பாண்டிய ராஜனுடன் சில நொடிகள் மட்டும் நடிகர் விஷால் நடனம் ஆடி உள்ளார்.
விஷாலின் புதிய படம் :
குட்டி விசால் இந்த படத்தில் ஆடும் போது அவருக்கு வயது 6. அதற்கு பிறகு தான் இவர் செல்லமே என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். பின் நடிகர் விஷால் அவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். ஆனால், இரும்புதிரை படத்திற்க்கு பின்னர் விஷால் நடிப்பில் வெளியான எந்த படங்களும் பெரிதாக வெற்றி பெறவில்லை.
இறுதியாக இவரது நடிப்பில் வெளியான ‘எனிமி’ திரைப்படம் சுமாரான வெற்றியை தொடர்ந்து. இதை தொடர்ந்து தற்போது விஷால், AAA பட இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ஒரு படங்கள் கூட இதுவரை வெற்றியடைந்தது இல்லை. இறுதியாக பிரபு தேவாவை வைத்து ‘பாகீரா’ படத்தை இயக்கி இருந்தார். அந்த படமும் தோல்வி அடைந்து.
உடல் எடை கூடிய விஷால் :
இப்படி ஒரு நிலையில் இவர் விஷாலை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனை உறுதி செய்யும் விதமாக விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் நடிகர் விஷால் உடல் எடை கூடி படு குண்டாக காட்சி அளிக்கிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
AAA சம்பவம் :
இதுவரை விஷால் நடித்த படங்களில் விஷால் பிட்டாகவே இருந்தார். இப்படி ஒரு நிலையில் விஷாலின் இந்த தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் பலர் வியப்படைந்து உள்ளனர். ஒருவேளை விஷால் இந்த படத்திற்காக உடல் எடையை கூட்டி இருக்கிறாரா என்பது தெரியவில்லை. ஏற்கனவே AAA படத்தில் சிம்புவை உடல் எடையை கூட்ட வைத்து அவரது கேரியரை குளோஸ் செய்தவர் ஆதிக் ரவிச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.