விஷால் மக்கள் நல இயக்க விழா திடீரென்று ரத்து செய்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் ஆவார். இவர் சினிமாவின் நடிகர் ஆவதற்கு முன்பே நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து இருந்தார். அதன் பின் இவர் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் செல்லமே.
அதன் பின் நடிகர் விஷால் அவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர், திரைப்படத் நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார். சமீபத்தில் நடந்த நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் அணி தான் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறது. அதோடு தமிழ் சினிமாவில் புரட்சி தளபதி என்று நடிகர் விஷாலை அழைக்கிறார்கள். இருந்தாலும், விஷால் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
மார்க் ஆண்டனி படம்:
அந்த வகையில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லத்தி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதை அடுத்து தற்போது நடிகர் விஷால் அவர்கள் “மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார். இப்படத்தை எஸ்.வினோத் குமார் தயாரித்து இருக்கிறார். ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
படம் குறித்த தகவல்:
மேலும் இப்படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, செல்வராகவன் நடித்து இருக்கிறார்கள். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் லாரி ஓன்று கட்டுப்பாட்டை மீறி வேகமாக வந்து செட்டில் மோதி இருந்தது. அந்த மோதலின் போது அங்கு பல சினிமா தொழிலாளர்கள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் இருந்தனர். ஆனால், இந்த விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக யாருக்கும் அடிபடவில்லை. தற்போது இந்த படத்தினுடைய ரிலீசுக்கான வேலையில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
விஷால் மக்கள் இயக்க விழா:
மேலும் இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 3ஆம் தேதி நடக்க இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் விஷால் மக்கள் இயக்க நிர்வாகிகளை அழைத்து இந்த நிகழ்ச்சியை பிரமாண்டமாக நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக 300 பேருந்துகள் ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேரு உள்விளையாட்டு அரங்க நிர்வாகம் இதற்கு அனுமதி தர மறுத்து விட்டது.
விஷால் மக்கள் இயக்க விழா ரத்து:
அது மட்டும் இல்லாமல் 300 பேருந்துகளில் இருந்து ஆட்கள் வந்தால் அதற்கான இடம் இங்கு பத்தாது என்றும், போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்றும், கூறி அனுமதி மறுத்து விட்டிருக்கிறார்கள். இதனால் மார்க் ஆண்டனி படத்தின் இசை வெளியீட்டு விழாவை தீவு திடலில் நடத்த திட்டமிட்டார்கள். ஆனால் அந்த எண்ணமும் தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனால் மார்க் ஆண்டனி படத்தின் இசை வெளியீட்டு விழாவை எளிமையாக நடத்த விஷால் முடிவு செய்து இருக்கிறார். தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.