தமிழில் சினிமாவில் புரட்சி தளபதி என்று பட்டப்பெயரை எடுத்தவர் நடிகர் விஷால். பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகனான இவர் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார்.விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் 16-ந்தேதி சனிக்கிழமை, ஐதராபாத்தில் உள்ள ஐடிசி கோஹினுரில் நடைபெற்றது. மேலும், இவர்களது திருமணம் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது வரை இவர்கள் திருமணம் நடைவில்லை பெறவில்லை. இப்படி ஒரு நிலையில் விஷாலின் வருங்கால மனைவி அனிஷா, விஷலுடன் இருந்த புகைப்படத்தையும், நிச்சயதார்த்தத்தின் போது எடுத்த அணைத்து புகைப்படத்தையும் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்துநீக்கியும் இருந்தார். எனவே, விஷாலின் திருமணம் நின்று விட்டதாக கூறப்பட்டது.
இதையும் பாருங்க : ‘இந்த வேல எல்லாம் வெச்சிக்காத’ நிருபரை திட்டியது போல திருப்பதியில் ரசிகரையும் திட்டியுள்ள சமந்தா. இதோ அந்த வீடியோ.
ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி விஷாலின் பிறந்தநாளையொட்டி விஷாலுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் அனிஷா. ஆனால், இந்த ஆண்டு விஷால் பிறந்தநாளுக்கு அனிஷா எந்த ஒரு வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை. அதே போல விஷால் – அனிஷா திருமணம் நின்றுவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியானது.
லட்சுமி மேனனுக்கும் விஷாலுக்கும் கெமிஸ்ட்ரி உண்டாகி காதல் ஏற்பட்டது. பின்னர் தான் அனிஷாவுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பின்னர் லட்சுமி மேனன் விஷால் வீடியோ பார்த்துவிட்டு அந்த திருமணத்தை நிறுத்திவிட்டார் என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் பயில்வான் ரங்கநாதன் . சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிஷா, சமீபத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.