விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்வையாளர்களால் மிகவும் வெறுக்கப்பட்டவர் ஐஸ்வர்யா தான். அவருக்கு பின்னர் தனது பெயரை படு டேமேஜ் செய்துகொண்டவர் வைஷ்ணவி தான்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாக ஆர் ஜேவாக இருந்து வந்தார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெட்ரா மற்ற போட்டியாளர்களை விட இவர் சற்று வித்யாசமாகவே காணப்பட்டார்.
வித்யாசமான ஆடை, கையில் எப்போதும் ஒரு உரை என்று இருந்த இவர் பிக் தற்போது தனது முடியை வெட்டிக்கொண்டு கலர் அடித்துக்கொண்டு வித்யாசமான கெட்டபில் தன சுற்றி வருகிறார். எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி சர்ச்சையான விடயங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது நாயுடன் பீர் குடிக்க வேண்டும் அதற்கு பெங்களூரில் உள்ள toit எனப்படும் பார் சிறந்த இடமா என்று கேட்டுள்ளார். இதற்கு ஒரு ட்விட்டர் வாசி, உங்களுக்கு குடிக்க வேண்டும் என்றால் தனியாக ஹோட்டலுக்கு செல்லுங்கள் இந்த இடத்தை கெடுக்காதீர்கள் என்று பதிலளித்துள்ளார்.