தமிழ் சினிமாவில் சமீப காலமாகவே தயாரிப்பாளர்கள் சங்கம் பல பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. தயாரிப்பாளர் தற்கொலை, நடிகர்களின் அதிக சம்பளம் என்று பல்வேறு பஞ்சாயத்து ஓடிக்கொண்டு தான் வருகிறது.அது போக படங்களை வெளியிடுவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்றி வந்தது தயாரிப்பாளர்கள் சங்கம். 

Advertisement

இந்நிலையில் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி தனுஷ் நடித்துள்ள ,மாரி 2, ஜெயம் ரவி நடித்துள்ள ‘அடங்கமறு’, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’, விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’, விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ போன்ற பல படங்கள் வெளியாக உள்ளது.

இதில் பிரச்சனை என்னவென்றால் இதுநாள் வரை ஒரு திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்றால் பல்வேறு விதிகளை பின்பற்றி ஆக வேண்டும் என்று கெடுபிடி காட்டி வந்த தயாரிப்பாளர்கள் சங்கம்,  டிசம்பர் 21 ல் யார் வேண்டுமானாலும் படங்களை வெளியிடலாம் என்று அறிவித்தது. இதனால் டிசம்பர் 21 ரேஸில் தனுஷின் மாரி 2 படத்தையும் வெளியிடுவதாக அறிவித்தனர்.

Advertisement

ஏற்கனவே பல படங்கள் போட்டியில் உள்ள நிலையில் தனுஷ் படமும் வெளியாவதால் மற்ற நடிகர்களும் புலம்பி வந்தனர். இந்நிலையில் விஷ்ணு விஷால் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் புலம்பியதாவது, விதி முறைகள், விதிமுறைகள் இல்லை, மீண்டும் விதி பின்னர் விதி இல்லை. இப்படி தான் நீதி வழங்கபடுமா. இது முறையல்ல, இது எனக்கு இரண்டாவது முறையாக நடக்கிறது. பின்னர் எதற்கு விதிகள் எல்லாம் என்று புலம்பியுள்ளார். அவர் அப்படி கூறியதற்கு முக்கிய காரணமே தனுஷ்ஷின் மாரி 2 படம் திடீரென்று டிசம்பர் 21 ஆம் வெளியிடப்போவதாக அறிவித்தது தான் என்று கூறபடுகிறது. 

Advertisement
Advertisement