தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான “ராட்சசன்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் நடித்துள்ள எஃப்ஐஆர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. அதில் சிக்ஸ்பேக் வைத்து கட்டுமஸ்தான உடல் இருந்த விஷ்ணு விஷாலை கண்டு பலரும் வியந்து போனார்கள்.

அதே போல சமீபத்தில் விஷால் தனது வாழ்வில் பட்ட கஷ்டங்களையும் குடி பழக்கத்தால் ஏற்பட்ட பிரச்னைகலும் அதிலிருந்து எவ்வாறு மீண்டு வந்தேன் என்பதையும் ஒரு உருக்கமான பதிவை பதிவிட்டிருந்தார். விஷ்ணு விஷால் நடித்த ‘ஜீவா’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் விஷ்ணு விஷால் ஒரு கிரிக்கெட் வீரராக நடித்து இருந்தார்.

Advertisement

இந்த படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் விஷ்ணு விஷால் மிக அருமையான பேட்ஸ் மேன் தான். திரை உலகில் என்ட்ரியாவதற்கு முன்பு விஷ்ணுவின் கனவாக இருந்தது கிரிக்கெட் மட்டும் தான். பள்ளி மற்றும் கல்லூரி கிரிக்கெட் டீமில் ஆடிய விஷ்ணு விஷால், டி.என்.சி.ஏ லீக் போட்டிகளில் கூட விளையாடிய இருந்தார்.

விஷ்ணு விஷால், தனது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கிரிக்கெட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்தார். “சில நேரங்களில் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடியிருக்கலாம் என்று தோணும்.. 20/20 தொடங்கியபோது நான் கிரிக்கெட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்தேன். அது என் பலமாக இருந்திருக்கலாம். இருப்பினும் எனது வாழ்க்கை எனக்கு வேறு விதமான திட்டங்களை வைத்துள்ளது என்று உருக்கமுடன் சமீபத்தில் ஒரு பதிவில் கூறி இருந்தார். இந்த நிலையில் இவர் பள்ளியில் கிரிக்கெட் அணியில் இருந்த போது வென்ற பதக்கத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Advertisement
Advertisement