தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்விஷ்ணு விஷால் அவர்கள் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார். சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவகாரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
நடிகர் விஷ்ணு விஷால் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுஇருந்தார். மேலும், இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறப்பட்டு வருகிறது. சமீபத்தில் இதுகுறித்து பேட்டி அளித்த ஜுவாலா, ஆம் நாங்கள் இருவரும் டேட்டிங் செய்து வருகிறோம் முன்பே சொன்னது போல இதில் மறைக்க எதுவுமே கிடையாது விரைவில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் திருமண தேதி முடிவு அல்லது இதுகுறித்து ஏற்பாடுகள் நடந்தாலும் நாங்கள் விரைவில் அறிவிப்போம் என்று கூறி இருந்தார்.
மஹாராஷ்டிராவில் பிறந்த இவர் தற்போது ஹைதராபாத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதனை கண்ட இன்ஸ்டாகிராம் வாசி ஒருவர் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், சீன தயாரிப்புகளை தவிர்ப்போம், ஜூவாலாவை தவிர்ப்போம் என்று ஜுவாலாவின் உருவத்தை கேலி செய்யும் வகையில் குறிப்பிட்டுள்ளார். அந்த நபர் அனுப்பிய மெசேஜ்ஜை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஜுவாலா ‘இதை நோக்கி தான் நாம் சென்று கொண்டு இருக்கிறோம்’என்று பதிவிட்டுள்ளார்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகள் தற்போது பெரும் பொருளாதார இழப்பையும் மக்கள் இழப்பையும் எதிர்கொண்டு வருகிறது. இதனால் சீனா மீது உலக நாடுகள் பலவும் கோபத்தில் இருந்து வருகின்றனர். அவ்வளவு ஏன் நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி கூட இனி சீனப் பொருட்களை வாங்காமல் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்கி நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இப்படி ஒரு நிலையில் விஷ்ணு விஷாலின் வருங்கால மனைவியின் உருவத்தை சீனா முகம் என்று விமர்சித்து இருப்பது விஷ்ணு விஷாலின் வருங்கால மனைவியை பெரிதும் காயம் அடைய செய்துள்ளது. மேலும், ஜுவாலாவிற்கு ஆதரவாக பலர் ட்வீட் செய்து வருகின்றனர். மேலும், நீங்கள் தான் ஹைதராபாத்தின் பெருமை என்றும் சிலர் கூறியுள்ளனர். இருப்பினும் விஷ்ணு விஷால் இது குறித்து எந்த ஒரு பதிவும் இதுவரை செய்யவில்லை.