தயாராகிறதா ராட்சசன் 2 ? இந்த முறை சைக்கோவாக நடிக்கப்போறது அந்த பிரபல நடிகராமே.

0
2363
- Advertisement -

தமிழ் திரையுலகில் 2009-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘வெண்ணிலா கபடி குழு’. இந்த படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடித்திருந்தார். இது தான் விஷ்ணு விஷால் கதாநாயகனாக அறிமுகமான முதல் படமாம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து சித்தார்த் சந்திரசேகரின் ‘பலே பாண்டியா’, சுதா கொங்கராவின் ‘துரோகி’, ஸ்ரீ பாலாஜியின் ‘குள்ளநரி கூட்டம்’, சீனு ராமசாமியின் ‘நீர்ப் பறவை’, ராம் குமாரின் ‘முண்டாசுப்பட்டி, ராட்சசன்’, சுசீந்திரனின் ‘ஜீவா, மாவீரன் கிட்டு’, ரவிக்குமாரின் ‘இன்று நேற்று நாளை’, முருகானந்தமின் ‘கதாநாயகன்’, செல்லா அய்யாவுவின் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என அடுத்தடுத்து பல படங்களில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்தார்.

- Advertisement -

தற்போது, பிரபு சாலமனின் ‘காடன்’, எழிலின் ‘ஜகஜால கில்லாடி’, மனு ஆனந்தின் ‘FIR’ மற்றும் முரளி கார்த்திக்கின் ‘மோகன் தாஸ்’ என பல படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் விஷ்ணு விஷால். இந்நிலையில், விஷ்ணு விஷால் மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளி வந்திருக்கிறது.

அதுவும் அவர் நடிப்பில் வந்து ஹிட்டான ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தில் என்று கூறப்படுகிறது. 2018-ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படம் ‘ராட்சசன்’. இந்த படத்தினை இயக்குநர் ராம் குமார் இயக்கியிருந்தார். இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக பிரபல நடிகை அமலா பால் நடித்திருந்தார். த்ரில்லர் ஜானர் படமான இதில் வலம் வந்த ‘சைக்கோ’ கதாபாத்திரத்தில் சரவணன் என்பவர் நடித்திருந்தார்.

-விளம்பரம்-
ரீ ட்வீட் செய்துள்ள விஷ்ணு விஷால்

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று மெகா ஹிட்டானது. இப்போது இப்படத்தின் பார்ட் 2-வுக்காக நடிகர் விஷ்ணு விஷாலும், இயக்குநர் ராம் குமாரும் கூட்டணி அமைக்கப் போகிறார்கள் என்று கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. மேலும், பார்ட் 2-வில் ‘சைக்கோ’-வாக நடிக்க ‘கைதி’ அர்ஜுன் தாஸ் மற்றும் டேனியல் பாலாஜி இருவரிடமும் பேச்சு வார்த்தை நடக்கிறதாம்.

சமீபத்தில், ரகிகர் ஒருவர் விஷ்ணு விஷால் – இயக்குநர் ராம் குமார் காம்போவில் வெளி வந்த ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ இரண்டு படங்களை பற்றியும் குறிப்பிட்டு ஹிட் என தெரிவித்திருந்தார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேரிட்ட விஷ்ணு விஷால், “மூன்றுவாது முறை இயக்குநர் ராம் குமாருடன் கூட்டணி அமைக்க வெயிட்டிங்” என்று பதிவிட்டிருக்கிறார். இந்த ட்வீட் ‘ராட்சசன் 2’ தொடர்பாக வந்த செய்தியை உறுதிபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

Advertisement